நீக்கி ஒன்றற்கு உரியவாக்குவது அவற்றின்மேல் வரும் பெயரும், முற்று வினையும், குறிப்புமே ஆகும். பெயர்ச் சொல்லோடு பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் வேற்றுமைப்பொருள் முதலிய பொருளில் புணரும்போது வேற்றுமை உருபும் பிற உருபுகளும் நீங்கி நிற்க இரண்டும் பலவுமாகத் தொடர்ந்து ஒருசொல் போன்ற தன்மை உடையதாய்ப் பிளவுபடாமல் தொகுத்து நிற்பது தொகைநிலை எனப்படும். தொகையை விரித்தால் பிளவுபட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்போல நிற்கும். தொகையாவது 1. வேற்றுமைத்தொகை, 2. உவமைத்தொகை, 3. உம்மைத்தொகை, 4. வினைத்தொகை, 5. பண்புத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு வகைப்படும். ‘படு’ என்ற சொல் மேலே கூறிய ஆறு தொகைச் சொற்களோடும் சேர்ந்துவரும்போது அத்தொகைச்சொல் தனிவகையைச் சார்ந்தது. விளக்கம் : சாத்தன் என்பது, உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவானது. சாத்தன் இவன், சாத்தன் இது என்று பின் வரும் பெயராலும் சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது என்று பின்வரும் வினையாலும் முறையே உயர்திணை, அஃறிணை என்று விளங்கின. மரம் என்ற பால் பகா அஃறிணைப்பெயர் மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன என்று பின்வரும் வினையால் முறையே அஃறிணை ஒன்றன்பால், அஃறிணைப் பலவின்பால் என்னும் பால் பாகுபாட்டை விளக்கியது. |