சுவாமிநாதம்152சொல்லதிகாரம்
 

     மூலத்தில் ‘இன்’ உருபு உடையதாக இருந்து மறைந்த தொகை,
ஒன்றுக்கு மேற்பட்ட பொருளில் வரும். இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம்
வேற்றுமை வரை உருபு மறைந்து வந்தால் தொகைச் சொல்லும் விரிதொடரும்
ஒரே பொருளைத் தரும். மூன்றாம் வேற்றுமையும் முதல் வேற்றுமையும்
ஒன்றாகும். தொகைச்சொல்லில் முன்மொழி, பின்மொழி ஆகிய இரண்டு
மொழியிலும், உள்ள இரண்டு மொழியில் இல்லாமல் வேறொரு மொழியிலும்
பொருள் நிற்கும்.

     முற்றுச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், பெயரில் வேற்றுமை
உருபேற்றசொற்கள், இடைச்சொல், உரிச்சொல், அடுக்குமொழி ஆகியவை
விரிந்து வருபவை தொகாநிலைத் தொடர்மொழிகளாகும்.

     அசைநிலைக்கு இரண்டு சொல்லும் பொருள் நிலைக்கு (அதாவது
விரைவுக்கு) இரண்டு சொல்லும் மூன்று சொல்லும் இசைநிலைக்கு இரண்டும்
மூன்றும் நான்கும் ஆகச் சொல்லடுக்கி வரும்.

     விளக்கம் : கடிப்பகை-கடிக்குப் பகை, கடியினது பகை என நான்காம்,
ஆறாம் வேற்றுமையிலும் ஆக இரு பொருளில் மயங்கி வந்தது.

சொற்பொருள் - 1. சொல்லான் அறியப்படும் பொருள் (கருவிபொருள்) 2.
சொல்லின் அறியப்படும் பொருள் (ஏதுப் பொருள்) 3. சொற்குப் பொருள்
(4-ம் வேற்றுமைப் பொருள்) 4. சொல்லது பொருள் (6-ஆம் வேற்றுமைப்
பொருள்) 5. சொல்லும் பொருளும் (உம்மைத் தொடர்) 6. சொல்லாகிய
பொருள் (பண்புத்தொடர்) 7. சொல்லானது பொருள் என ஏழு பொருள்
மயங்கி வந்துள்ளது என்பது தொகைச்சொல்லுக்கு ஏனைய இலக்கண
ஆசிரியர்கள் கருத்தை யொட்டித் தரப்படும் விளக்கம். ஆனால் இவருடைய
கருத்துப் புதுமையாக உள்ளது.