|           மூன்றாம் வேற்றுமையும்     முதல் வேற்றுமையும் ஒன்றாகும் என்றது      இரண்டும் கருத்தாப் பொருளில் வரும் என்பதாகும். இராமன் இராவணனைக்      கொன்றான். இதில் இராமன் கருத்தா; அது முதல் வேற்றுமையாக வந்துள்ளது.          இராவணன் இராமனால்     கொல்லப்பட்டான்-இதில் இராமன் மூன்றாம்      வேற்றுமைக் கருத்தாப் பொருளில் வந்துள்ளது.           முன் மொழியில்     பொருள் சிறந்து நிற்றல் : வேங்கைப் பூ           பின் மொழியில்         ’’               : நீர்க்குவளை           இரு மொழியில்         ’’               : இராப்பகல்           அன் மொழியில்        ’’               : பொற்றொடி -                     (இது பெண்ணைக்குறிக்கும்போது மட்டுமே)           தொகாநிலை         முற்று            : உண்டான் சாத்தன்      பெயரெச்சம்   : படித்த மாணாக்கன்      வினையெச்சம் : உழைத்து உயர்ந்தான்          பெயரும் உருபும் ஏற்றசொல்:         முதல் வேற்றுமை : உழைப்பு     வென்றது      2ஆம்    ’’     : குறளைக் கற்றான்      3ஆம்    ’’     : கையால் எழுதினான்      4ஆம்    ’’     : நண்பனுக்குக் கொடுத்தான்         5ஆம்    ’’     : ஊரிலிருந்து வந்தான்      6ஆம்    ’’     : வள்ளுவருடைய நூல்      7ஆம்    ’’     : பல்கலைக்கழகத்தில் படித்தான்         இடைச்சொல் தொடர் :     மாணவர்களே! படியுங்கள் உண்மையே பேசு       |