உரிச்சொல் தொடர் : கடிமணம் அடுக்கடுக்கு : புலி புலி அசைநிலை : மற்றோ மற்றோ அதனாலேயேதான் (இங்கு இரண்டு ஓகாரத்திற்கும் பொருள் இல்லை.) பொருணிலை: போபோபோ - ஒருசொல் மூன்று முறை அடுக்கி வந்தது. வருக வருக - இரண்டு முறை அடுக்கி வந்தது. ஏஎ ஏஎ அம்பல் மொழிந்தனள்யாயே - இரண்டு முறை அடுக்கி வந்தது. இசைநிலை : நல்குமே நல்குமே நல்குமே நாமகள் - மூன்று முறை அடுக்கி வந்தது பாடுகோ, பாடுகோ, பாடுகோ, பாடுகோ - நான்கு முறை அடுக்கி வந்தது. தொகையில் பொருள் சிறக்கும் இடம் என்று ஏனையோர் சொன்னதை இவர் ‘தொகைநிலை’ என்று விளக்கினார். ஏனெனில் தொகாநிலைத் தொடர் என்று தொகாத இடங்களைச் சுட்டியதால் தொகையாய் வருவதைத் ‘தொகைநிலை’ என்றார். இப்பகுதி நேமிநாதம் 64ஆம் சூத்திரத்தைத் தழுவியுள்ளது. ஆனால் அவரும் ‘முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும் அன்மொழியும் என்றவற்றில் ஆம் பொருள்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏனைய பகுதி, இலக்கண விளக்கம் 345, 346 ஆகிய இரண்டு சூத்திரத்தையும் தழுவியது. |