|         68.  |         என்னும்ஓர்பொருட்         பலபேர்பிரி யாஓர்பொரு ளின்;இடும்               பலபேர் சிறப்பின் வழா; செய்யாய் என்மறையே          முன்னிலையிற் செய்யெனவாங்; குறிப்பிசை சொல்லாக               மூன்றுமே குறிப்பெச்சமறை, பிரிவோடு, ஒழிவு          இன்னிசையில் உம்மை, யென, என்னல பெயர்வினையும்பிறிது               இலாது ஏழ்சொல் எச்சம்; எச்சமிதில் எட்டு          முன்னிலகும் பெயர்,வினை எச்சங்களைப் போற்குறிப்பு               மொழியும் எச்சம் விளக்கு(ம்)முன்னம் உணர்வின்                                            அளந்தறியே.     (15) |                 எச்சம் பற்றிய இலக்கணம்     கூறுகின்றது.           உரை:     ஒரு பொருளைக் குறித்து வரும் பெயர்கள் பல பொருளைப்      பிரித்துக்காட்டாது. பொருள் வேறுபாடு இல்லாமல் ஒரு பொருளைக் குறித்து      வரும் பல சொற்கள் அப்பொருளைச் சிறப்பித்தலின் வழு என்று      கருதப்படமாட்டாது.               செய்யாய் என்னும்     முன்னிலை எதிர்மறை வாய்பாட்டுச் சொல் ‘செய்’      என்ற வாய்பாட்டில் உடன்பாட்டுப் பொருளில் வரும்.           1. குறிப்பு, 2.     இசை, 3. சொல் என்ற மூவகைக் குறிப் பெச்சத்தோடு      4 எதிர்மறை, 5. பிரிவு, 6. ஒழியிசை 7 உம்மை, 8. என, வென்ற எச்சம் 9.      பெயர், 10. வினை என்ற ஏழுவகையும் சேர்த்து எச்சங்கள் பத்து ஆகும்.      இதில் முன்னே கூறப்பட்ட எட்டுவகை எச்சங்களும் பெயரெச்சம்      வினையெச்சம் ஆகிய இரண்டும் போலக் குறிப்பு மொழியும் எச்சச்      சொற்களை விளக்குவகையாக அமையும். இவற்றைக் குறிப்பு அறியும்      அறிவால் அறிந்துகொள்ள வேண்டும்.           விளக்கம்     : தொல்காப்பியன், தமிழ்மொழியின் முதல் மொழி நூல்      அறிஞன், இலக்கணக்கோட்பாட்டில் நுண்மாண் நுழை புலம் கண்டோன்      என்பனவெல்லாம் ஒருவரையே குறிக்கும்.       |