சுவாமிநாதம்157சொல்லதிகாரம்
 
உம்மை :


 
சாத்தனும் வந்தான்
எனவே கொற்றனும்
வந்தான் என்று பொருள்
படும்.
  சாத்தன் வந்தான். கொற்றன்
வந்தான். கொற்றனும் வந்தான்
என்பதற்கு உம்மை இல்
லாமல் வந்தது.

என : கொள்ளெனக் கொண்டான். ‘வீடு உணர்ந்தார்க்கும்’ என்ற பாடலில்
                             இரும்புலி சேர்ந்த இடம் என வியப்பாமல்
                             எனப் பொருள் உரைக்க வேண்டுதலின்
                             என என்பது எஞ்சி நின்றது.

     எச்சங்களில் குறிப்பு, இசை, சொல் ஆகிய மூன்றை ஒரு பிரிவாகவும்
மற்றைய ஏழையும் மற்றொரு பிரிவாகவும் கூறியது முன்னதற்கு முடிக்கும்
சொல் இல்லை என்பதும் பின்னதற்கு முடிக்கும் சொல் உள்ளது என்பதும்
காரணமாகும். ‘எஞ்சிய மூன்றுமேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவி
இல்லென மொழிப’ (தொல். சொல். 436) என்ற தொல்காப்பிய நூற்பாவால்
இதனை உணரலாம்.

     இச்சூத்திரம் இலக்கண விளக்கம் 355, 353, 348, 349, 354 ஆகிய
சூத்திரங்களைப்பின்பற்றியது.

     பா. வி. ‘சிறப்பின் வழாயெயாய்’ (முதல் வரி) என்ற மூலபாடம்
‘சிறப்பின் வழா செய்யாய்’ என்று திருத்தப்பட்டுள்ளது. ஒழிவு பின்னியலும்’
என்ற மூலபாடம் (3வது வரி) ‘ஒழிவு இன்னிசையில்’ அதாவது ஒழியிசை
என்று திருத்தப்பட்டுள்ளது.