69. | அளைமறி பாப்பு, அடிமறி, தாப்பிசை, விற்பூண், மொழிமாற்று, ஆற்றொழுக்கு, நிரனிறையே, கொண்டு கூட்டல், எட்டாம்; வளர் பொருள் கொளபின் மொழி முன்னிடை சேறல்; அடிகண் மாறுகினும் பொருள் ஒத்த நடுச் சொன்முதல் கடைபோய்த் தெளிதல் ; பிறசொன் முதல் நோக்கல்; ஓர் அடியிற் பொருள்நேர் செய்மொழி மாற்றுதல்; அடிதொறும் பொருண் முற்றிடுதல், உளவெழுத்துப் பெயர் வினைச்சொற்பொருள் எதிர்நேர் நிரலா யுறல் பொருந்திற் றிசைத்தல், விரி என்பர் உயர்ந்தோரே. (16) | பொருள்கோளின் வகையும் அவற்றின் விரியும் விளக்குகின்றது. உரை: 1. அளைமறி பாப்பு 2. அடி மறி 3. தாப்பிசை 4. விற்பூட்டு, 5. மொழிமாற்று 6. ஆற்றொழுக்கு 7. நிரனிறை 8. கொண்டு கூட்டு எனப் பொருள்கோள் எட்டு வகைப்படும். செய்யுளின் ஈற்றில் நின்ற சொல் முதலிலும் இடையிலும் சென்று பொருந்தும்படி அமைவது அளைமறிபாப்புப் பொருள்கோள். செய்யுளின் அடிகள் அப்படியே முன்னும் பின்னும் மாற்றினாலும் பொருள் மாறுபடாதது அடிமறிப்பொருள்கோள். செய்யுளின் இறுதியில் நின்ற சொல் முதலில் நிற்கும் சொல்லை நோக்கி நிற்பது விற்பூட்டுப் பொருள்கோள். தாம் குறித்த பொருளிற்கு ஒத்த சொற்களை ஓரடியுள்ளே மாற்றிச் சொல்லுதல் மொழிமாற்றுப் பொருள்கோள். ஏனைய அடிகளை நோக்காது அடிதோறும் பொருள் முடிவு பெற்று வருவது ஆற்றொழுக்குப் பொருள்கோள். பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் அவற்றை முடிக்கும் |