சுவாமிநாதம்159சொல்லதிகாரம்
 

சொற்களையும் எதிர் எதிராக வைத்தும் வேறு வேறு வரிசைப்படும்படியும்
வைத்துள்ளதைப் பொருள் பொருத்தத்திற்கேற்ப அமைப்பது
நிரனிறைப்பொருள்கோள்.

     பொருள் தருவதற்குப் பொருந்தும்படி முன்னின்ற சொற்களைப் பின்னும்
பின்னின்ற சொற்களை முன்னும் கொண்டு கூட்டிப் பொருள்கொள்வது
கொண்டு கூட்டுப்பொருள் ஆகும்.

     விளக்கம் : இது 411 முதல் 419 வரையுள்ள நன்னூல் சூத்திரங்களை
ஒட்டியது. வாக்கியத்தில் தொடர்களும் சொற்களும் அமையவேண்டிய ஒரு
முறை உண்டு. ஆனால் அம்முறை மாறியும் வருவது இயற்கையே. ஒரு
முறையை அடிப்படையாகவும் மற்றவற்றைத் திரிந்ததாகவும் கொள்வர்.
உரைநடையைவிடச் செய்யுளில் முறை மாற்றம் சற்று மிகுதியாகக் காணப்படும்.
எனவே செய்யுளைப் பிரித்துப் பொருள் கொள்ளும் முறையே பொருள்
கோளாக வளர்ந்தது. பொருள் கோளில் ஆற்றுஒழுக்கு என்பது இயல்பான
முறையைச் சுட்டும்; ஏனையவை மாறி வருகின்றவற்றை முறைப்
படுத்திக்கொள்ளும் வகைக்கு இடப்பட்ட பெயர்களாகும். ஆனால் கொண்டு
கூட்டு என்பதைத் தனிவகையாகக் கொண்டது ஆராய்ச்சிக்குரியது.
ஆற்றொழுக்குத் தவிர ஏனையவற்றைக்கொண்டு கூட்டு என்ற பொது
வகையில் அடக்கி விடலாம். இல்லாவிட்டால் கொண்டு கூட்டு என்பதை
அடிமறி, தாப்பிசை, மொழி மாற்று, நிரனிறை ஆகியவற்றுள் அடங்காத
பிறமுறைகளைக் கொண்டதாகக் கருதவேண்டும். மொழிமாற்று என்பதில்
கொண்டு கூட்டு இல்லாதது போலத் தோன்றுகிறது. ஆனால் மொழிமாற்று
உடைய முழுச்செய்யுள் ஒரு பொருள் உடையது. அதன் உறுப்பான அடிகளை
முறை மாற்றினாலும் பொருள் ஒன்றே தருகிறது. எனவே முறை மாற்றியும்
மாற்றாமலும் பொருள் கொள்ளலாம். முறை மாற்றிப் பொருள் கொள்ளலாம்
என்ற முறையில் ஒருவகை கொண்டு கூட்டாகக்கருதி மொழி மாற்றும் 
ஒருவகையானபொருள் கோளாகக்கொள்ளப்பட்டது.