சிறு பொழுது மருதத்திணைக்கு உரியது. நெய்தல்    திணைக்கு, எற்பாடு என்ற      சிறுபொழுது உரித்து. ஆறுபெரும் பொழுதுகளும்    மருதத்திணைக்கும்      நெய்தற்றிணைக்கும் உரியன. 1. தெய்வம், 2. உயர்ந்தோர்,    3. அல்லோர்,      4. விலங்கு, 5. ஊர், 6. நீர், 7. புள், 8.     மரம், 9. பூ, 10. உணவு, 11. பறை, 12.      யாழ், 13. பண்,    14. தொழில் எனப் பதினான்கும் பிறவும் சேர்ந்தது      கருப்பொருளாம்.          விளக்கம்     : இது நம்பியகப் பொருள் 13 முதல் 19 வரையுள்ள      சூத்திரங்களை ஒட்டியது.                    |         74.  |         குகன்,சிலம்பன்,         கொடிச்சியே,கு றவர்குறத் தியர்தேன்,               குறிச்சி,சுனை, அருவி,களி புலி,கரடி, யானை,          சிகண்டி,முயல், மான்,பன்றி, உடும்புவரை,யாடு               சிங் க(ம்),மா சுணம்கவரி, நாவிலிஞ்சி, மஞ்சள்          மிகுங்கடம்பு, அசோகு,புன்னை, தேக்கு,ஏனல், காந்தள்,               வேங்கை,கோங்கு, அகில்,ஏலா தோரை,சந்தங், கறி,வேய்,          சுகந்தமாத, விவெறிகொள், துடி,குறிஞ்சி யாழ்,பண்               சுனையருவி யாடல்,தினை காத்தல்குறிஞ் சியினே. [4] |                 குறிஞ்சிக்குரிய     கருப்பொருளினைத் தொகுத்து உரைக்கின்றது.           உரை:     குகன், சிலம்பன், கொடிச்சி, குறவர், குறத்தியர், தேன், குறிச்சி,      சுனை, அருவி, புலி, கரடி, யானை, சிகண்டி (முயல்). முயல், மான், பன்றி,      உடும்பு, மலையாடு, சிங்கம், அசுணம், கவரி, நாவி, இஞ்சி, மஞ்சள், கடம்பு,      புன்னை, தேக்கு, தினை, காந்தள், வேங்கை, கோங்கு, அகில், ஏலா (ஏலம்),      தோரை, சாந்தம், மிளகு, மூங்கில், மாதவி, துடி, குறிஞ்சியாழ், குறிஞ்சிப்பண்,      சுனையாடல், அருவியாடல், தினைகாத்தல் முதலியன குறிஞ்சிக்குரிய      கருப்பொருளாம்.           விளக்கம்     : இது நம்பியகப்பொருள் 20-ஆம் சூத்திரத்தைத் தழுவியது      நாவி என்பது புழுகுப்பூனை என்ற பொருளில் சிலப்பதிகாரத்திலும்     (பீலி,      மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் 25, 53),    கஸ்தூரி மிருகம் என்ற பொருளில்   |