சுவாமிநாதம்167பொருளதிகாரம்
 

பிரபுலிங்கலீலையிலும் (‘நாவியின் கட்போதுறு மதம் விடுத்து’ பிர.புதே.28)
வந்துள்ளது.

75. குறைவில்கன்னி, தீவிடலை, எயிற்றி,யுடன் மறவர்,
     கொடியமறத் தியர்,குறும்பூழ், பருந்து,சென்னாய் கழுகு,
புறவு,கவு தாரி,செவ்வல், குரவு,மரா, உழிஞை,
     புன்கு,இருப்பை பாலை,நெல்லி முருக்கு,ஓமை கள்ளி,
வறியகிணறு, இலவு,நரி, கூகை,யார்ச் சூரை,
     வன்காரை, நெருஞ்சி,துடி, பஞ்சுரம்,பா லையின்யாழ்,
நிறை,முருங்கை, நொள்ளை,சமர் பகற்,சூறை யாடல்,
     நெறியலைப்புக், கொலை,கொள்ளை யிடல்,பாலைக்
                                       கருவே.    [5]

இது பாலைக்குரிய கருப்பொருளைத் தொகுத்து உரைக்கின்றது.

     உரை: கன்னி, விடலை, எயிற்றி, மறவர், மறத்தியர், குறும்பூழ், பருந்து,
செந்நாய், கழுகு, புறா, கவுதாரி, செவ்வல், குரவு, மரா, உழிஞை, புன்கு,
இருப்பை, பாலை, நெல்லி, முருக்கு, ஓமை, கள்ளி, பாழ்கிணறு, இலவு, நரி,
கூகை, சூரை, காரை, நெருஞ்சி, பஞ்சுரம், பாலையாழ், முருங்கை, நொள்ளை,
சமர், பகற்சூறையாடல், நெறிஅலைப்பு (வழியில் இடையூறு), கொலை,
கொள்ளையிடல் ஆகியன பாலையின் கருப்பொருளாகும்.

     விளக்கம் : இது நம்பியகப் பொருள் 21ஆம் சூத்திரத்தைத் தழுவியது.

76. கரும்ஆயன், குரும்பொறை, நா டன், மனைவி, இடையர்,
     காதல்இடைச் சியர்,பாடி, முயல்,கலை,கான் கோழி,
வருமான்,மல் லிகை,குருந்து, பிடவ(ம்)முல்லை, காயா,
     வரகு,கொன்றை, சாமை, முதிரை, கண்குல்லை, தோன்றி,
முருகு,ஏறுங் குறுஞ்சுனை,கான் யாறு,சா தாரி,
     முல்லை,யாழ், கொல் லேற்றுப் பறை,முதிரை விற்றல்,
இரும்ஏறு தழுவுதல், குழல் ஊதல்,தயிர் விலை,மூ
     வினமேய்த்தல், கான்யாற்றி னாடன்முல்லை தனக்கே.   [6]

முல்லையின் கருப்பொருளைத்தொகுத்து உரைக்கின்றது.