தெரிவைகுல முறைகிளத்தல், அவன்அவளை உயர்த்தல், தெரியாள்போல் வினவல்,வன் இறைவித்தன் மைஇயம்பல், அருமைசொலல், இன்றியமை யாதெனல்,நின் குறைநீ அறையெனல்,பாங் கியைப்பழித்தல், பேதைமைஊட் டுதலே. [9] | இதுவும் அடுத்த மூன்று சூத்திரங்களும் பாங்கியிற் கூட்டம் உணர்த்துகின்றன. உரை : 1. இரத்தல், 2. சேட்படை, 3. மடல் கூற்று 4. மடல் விலக்கு, 5. ஒத்துக்கொளல், 6. மடல் கூற்று ஒழிதல், 7. குறை நயப்பித்தல், 8. விரிநயத்தல், 9. தலைவனையும், தலைவியையும் தோழி சேர்த்தல், 10. கூடுதல், 11. ஆயத்தோடு சேர்த்தல், 12. வேட்டல் ஆகிய பன்னிரண்டு பெரும் பிரிவும்; 1. தலைவன் உட்கருத்து சொல்லுதல், 2. தலைவியின் குலமுறை, (குடிவழி) கூறுதல், 3. தலைவன் தலைவியைஉயர்த்திக் கூறுதல், 4. பாங்கி தெரியாதவள் போல வினவுதல், 5. தலைவியின் பண்பு நலம் கூறுதல், 6. தலைவியின் அருமை பெருமை கூறுதல், 7. தலைமகன் இன்றியமையாமை கூறுதல், 8. பாங்கி தலைவனை உன்னுடைய குறையை நீயே சென்று தலைவியிடம் கூறு என்றல், 9. தலைவன் பாங்கியைப் பழித்தல், 10. பேதைமை ஊட்டுதல். விளக்கம் : இது அகப்பொருள் 143, 144.10 சூத்திரங்களை ஒட்டியது. 94. | தலைவியறிவு அவன்உரைத்தல், முற்புணர்ச்சி கூறல், தன்னிலைகோன் சாற்றல்,உல கியல்பாங்கி உரைத்தல், உலகியலைமறுத்தல்,அஞ் சிஅச்சுறுத்தல், அவன்கை யுறைபுகழ்தல், மறுத்தல்,ஆற்றா நெஞ்சோடு அழுங்கல், புலவிஆற் றுவித்துஇகுளை சொல்,இறைவன் மடலே பொருள்எனஎண் ணுதல்,அதனைப் புவிமேல்வைத் துரைத்தன், மேவியதன் மேல்வைத்துரைத் தல்,அவையவத் தின்அருமை விளம்பல்,தன் னைத்தான்புகழ்தல், அருள்கொண்டா டுதலே [10] | |