சுவாமிநாதம்184பொருளதிகாரம்
 

     உரை : 11. தலைவியின் மூதறிவுடைமை தலைவன் கூறுதல், 12.
முன்புணர்ச்சியைக் கூறுதல், 13. தன்னுடைய நிலையைத் தலைவன் கூறுதல்,
14. தோழி உலகியலைக் கூறுதல், 15. தலைவன் உலகியலை மறுத்தல், 16.
தோழிதான் அஞ்சித் தன் அச்சத்தைக் கூறுதல், 17. தலைவன் தான் பரிசாகக்
கொண்டு வந்ததைப் புகழ்தல், 18. தோழி பரிசை மறுத்தல் 19. தலைவன்
பொறுக்கமுடியாத உள்ளத்தோடு வருத்தப்படுதல், 20. தோழி வருத்தத்தை
ஆற்றுவித்து நீக்குதல், 21. தலைவன் மடலே பொருள் என்று கூறுதல், 22.
மடலேற்றினை உலகின் மேல்வைத்து உரைத்தல், 23. தன்மேல் வைத்து
உரைத்தல், 24. தலைவி உடலுறுப்புக்களின் அருமை பெருமை கூறல், 25.
தன்னைத்தான் புகழ்தல், 26. அருள் கொண்டாடுதல்.

     விளக்கம் : இது அகப்பொருள் 144.11 வரிமுதல் 145 ஆகிய
இரண்டையும் தழுவியது.

     பாட விளக்கம் : ‘இகுளை சொல்’ (3-வது வரி) என்பது ‘இகுளை சொல்லால்’ என்று இருத்தல் நலம்.

95. கொண்டுநிலை கூறல்,இள மைத்தன்மை கூறல்,
     கோதைவரு தியல்உரைத்தல், செவ்வியரிது உரைத்தல்,
அண்டுசெவ்வி எளிதுரைத்தல், எனைமறைப்பின் எளிதுஎன்று
     அவள்நகுதல், நகைபொறான்புலம் பல்,அவள் தேற்றல்
பண்டுளகை யுறைஏற்றல், இறையாற்றல், குறைநேர்
     பாங்கிஅவட்கு உணர்தல்,அறி யாள்போலக் கூறல்,
கண்டனன்மன் னனையென்றல், சகியைமின்னாண் மறைதல்,
     கருமறைப்பென் எனத்தழுவல், கையுறைவாழ்த் துதலே. [11]

     உரை: 27. பாங்கி கொண்டு நிலைகூறல், 28. தலைவியின் இளமைத்
தன்மையைத் தலைவனுக்குக் கூறல், 29. தலைவன் தலைவி தன்னை வருத்திய
தன்மையைக் கூறுதல், 30. தோழி செவ்வியருமை கூறுதல், 31. தலைவன்
தலைவியினுடைய செவ்வி