|         எளிமையைக் கூறுதல்,         32. தோழி தன்னை மறைத்தால் எளிது என்று கூறிச்          சிரித்தல், 33. அவளுடைய கேலிச் சிரிப்பைப் பொறுத்துக் கொள்ளாமல்          புலம்புதல், 34. தோழி தலை மகனுக்கு ஆறுதல் சொல்லுதல், 35. தோழி          தலைவன் முன் வைத்திருந்த பரிசை (கையுறை) ஏற்றல், 36. தலைவன்          ஆற்றுதல், 37. இறைவன் குறையை உணர்ந்த தோழி அதைத் தலைவிக்கு          உணர்த்துதல், 38. தலைவி ஒன்றும் அறியாதவள் போல் பதில் கூறுதல், 39.          தோழி தலைவனைக் கண்டேன் என்று கூறுதல், 40. தலைவி தோழியை          மறைத்தல், 41. தோழி தன்னை மறைப்பது ஏன் என்று தழுவுதல், 42. தோழி          பரிசைப் புகழ்தல்.           விளக்கம்     : கொண்டு நிலைகூறல் என்பது அகப்பொருள் 145.8      வரியையும் ஏனையவை 146, 147 ஆம் சூத்திரங்களையும் யொற்றியன.                            |         96.  |           வாழ்சகிகோன்             துயர்கிளத்தல், மறுப்பரிதாம் என்றல்                   மன்குறிவே றுஎனல்அவளை முனிதல்,அவள் முனிதல்,                          தோழிகைக்கை யுறைஏற்றல் அவள்உடன்பா டுஅவர்க்குத்                   தோழிகூறு தல்குறிக்கண் செயல்குறிக்கண்கொண்             டுஏகல்              வீழ்குறிஉய்த்து அகறல்இறை வரல்புணர்தல் புகழ்தல்                   விடுத்தல்சகி கையுறைகாட் டுதல்பாங்கியிற்             கூட்டல்,             ஆழ்தலைவற்கு ஓம்படைசாற் றுதல்விருந்தால் விலக்கல்,                   அவன்விரும்பல் உடன்பாங்கிற் கூட்டுஅறுபத்             தொன்றே.                                                             [12] |                            உரை:       43. தோழி தலைவனின் துயரநிலையைக் கூறுதல் 44. தலைமகன்        மறுப்பது கடினம் என்று கூறல், 45. தலைமகள் குறிப்பு வேறு என்று கூறுதல்,        46. தலைவியைக் கோபித்தல், 47. தலைவி பாங்கியைக் கோபித்தல், 48.        தோழி கையிலுள்ள பரிசைத் தலைவி ஏற்றல், 49. தலைவி ஒப்புக்        கொண்டதைத் தலைவனுக்குத் தோழி கூறுதல், 50. தோழி கூடும் இடம்        குறிப்பிட்டுச் சொல்லுதல், 51. அந்த இடத்திற்குத்   |