தலைவியைக் கொண்டுசேர்த்தல் 52. குறியிடம் சேர்த்து விட்டுத் தோழி நீங்குதல் 53. தலைவன் அங்கு வருதல், 54. புணர்தல், 55. புகழ்தல் 56. தலைவியைவிட்டு நீங்குதல், 57. தோழி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டுதல், 58. ஏனைய தோழியர் கூட்டத்தோடு சேர்த்தல் 59. தலைவன் தலைவியைப் பாதுகாக்கவேண்டுமெனல் 60. விருந்து விலக்குதல் 61. தலைவன் விருந்துகொள்ள விரும்புதல் எனப் பாங்கியிற் கூட்டம் அறுபத்தொரு வகைப்படும். விளக்கம் : இது அகப்பொருளின் 148, 149 ஆகிய இரண்டு சூத்திரங்களின் தழுவல். 97. | அறுகுறிக்கண் சொல்லல்,முதல் விருந்துவெஃகல், ஈறாய் ஆறிரண்டும் பகற்குறியாம்; இரங்குதல்,வன் புறை,இற்தேவி செறிஉணர்த்தல், மூவகைத்தாய்த், தலைவன்நீங் கிடத்திற்றே யந்திப்பொழுதினைக்கண்டு இரங்கல்,சகிபு லம்பல், இறைவன்நீ டல்இறைவி வருந்தல்,சகி கழறல், இறையவன்முன் னிலைப்புறச்சொல் மொழிதல்,சகிக்கு உரைத்தல், நெறிசகியச் சுறுத்தல்,நீங் கற்குஅருமை தலைவி நினைந்து இரங்கல், அவன்வரவு பாங்கிசொலுஞ் சிறப்பே. [13] | இது பகற்குறி விளக்குகின்றது. உரை: (மேலே கூறப்பட்ட) குறியிடம் சொல்லுதல் முதலாக விருந்தாக அழைக்கப்படுதலை விரும்புதல் ஈறாகப் பன்னிரண்டும் பகற்குறியாம். அது 1. இரங்குதல், 2. வன்புறை 3. வீட்டிலேயே இருக்கும்படி செய்தலைக் கூறுதல், (இற்செறிப்பு உணர்த்தல்) என்று மூன்று வகையினை உடையது. 1. தலைவனை நீங்கியபோது தலைவி மாலைப் பொழுதினைக் கண்டு இரங்குதல் 2. தோழி வருந்துதல் 3. தலைவன் வரும் காலத்தை நீட்டிக்கத்தலைவி வருந்துதல் 4. தோழி தலைவிக்குச் சொல்லுதல் 5. தலைவனோடு முன்னிலைப்புற மொழியாகக் கூறுதல் 6. தோழியோடு கூறுதல் |