வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோதல் 24. தோழி தலைவன் பின்சென்று அவன் வரவை விலக்குதல் 25. தலைமகன் மயங்குதல் 26. தலைவியின் துயரநிலையை எடுத்துக்கூறித் தலைவனை விடுத்தல் 27. தலைவன் செல்லுதல் ஆக இருபத்தேழும் இரவுக்குறியின் விரியாகும். விளக்கம் : இது அகப்பொருள் 158-12 வரி முதல் உள்ள பகுதியின் தழுவல். பாட விளக்கம். ஈராக் குறி (கடைசி வரி) என்பது மூலபாடம். 101. | இரவு இடையீடு அல்ல குறி; வரற்கு அருமை, எனவாய் இகு ளை இற வரவு உணர்த்தல், இறைவிதான் குறியின் மருள்வது சாற் றுதல், இறைதீங்கெடுத்து இகுளைஇயம்பல், மனன் புலந்துஏ குதல், வளவின் வறுங்களம் கண்டு இரங்கல் தரமுறுதன் துணைக்கு உரைத்தல், அவள் அவலம் பாங்கி தணித்தல், இறைமேற்பாங்கி குறிபிழைப்பு ஏற்றுதல் கோன் கருவிழிமேல் ஏற்றல்,அவள் குறிமருட்சி சொலல்,கோன் கடுஞ்சொல்அவட்கு உணர்த்தல்,கவன் றுஎன்பிழைப்பு அன்று எனவே. [17] | இது இரவுக்குறி இடையீடு பற்றி விளக்குகின்றது. உரை : இரவுக்குறி இடையீடு என்பது 1. அல்ல குறியும் (குறியில்லாதபோது உண்டாகும் போலிக்குறி) 2. வருவதற்கு அருமையும் (வருவதற்குரிய துன்பம்) என இரண்டு வகையினை உடையது. 1. தோழி தலைவன் வந்திருப்பதைக் கூறுதல், 2. தலைவி தான் குறி அஞ்சியதைக் கூறுதல், 3. தோழி தலைமகனுக்குரிய தீங்கு எடுத்துக் கூறுதல், 4. தலைவன் மனம் வருந்திப் போகுதல், 5. பொழுது விடிந்த பிறகு வறுங்களம் கண்டு தலைவி வருந்துதல், 6. தன்னுடைய தோழிக்குக் கூறுதல், 7. தலைவியின் துன்பத்தைத் தோழி தணித்தல், 8. குறிதவறியது தலைவனால் ஏற்பட்டது என்று |