சுவாமிநாதம்193பொருளதிகாரம்
 

     1. பொய் சொல்லுதல், 2. மறுத்துக் கூறுதல், 3. பேசுதல், 4.
உண்மையைக் கூறுதல் ஆகிய நான்கு பிரிவும் திருமணம் செய்து கொள்ளக்
கேட்டுக் கொள்ளும் (வரைவு கடாதல்) துறையைச் சேர்ந்தனவாகும்.

     விளக்கம் : நம்பியகப்பொருள் 164இல் கூறப்பட்ட செய்திகளே மேல்
சூத்திரத்தில் 2-வது வரியில் ‘சகிநாயகிபால்’ என்று தொடங்கி இச்சூத்திரத்தில்
மூன்றாவது வரி வரை (வரைவு கடாதலை வினவுதல் - வரைவு கடாதல்)
கூறப்பட்டுள்ளன. ஆயினும் நம்பியகப் பொருளில் 18 கிளவிகளே (‘உரைபெற
வகுத்த ஒன்பதிற்று இரட்டியும் வரைதல் வேட்கை விரியெனப் படுமே’)
கூறப்பட்டுள்ளது. எனவே அவர் கருத்துப்படி பிறர் விலக்குவித்தல் என்பது
தனிக்கிளவியாகக் கருதப்படாது. முன்னர் உள்ள கிளவியோடு சேர்த்துக்
கொள்ளப்பட வேண்டும். சாமிகவிராயரோ அதையும் தனியாகக் கொண்டு 19
கிளவி என்று கூறியுள்ளார்.

104. வினவுதாய்க்குஒளித் தமைகூறு தல்,அலர்அச் சுறுத்தல்,
     வெறியச்சம், தாய்அறிவு, பிறர்வரைவும் உணர்த்தல்,
அனுவிலவரை வு,எதிர்வுஉணர்த்தல், வரையும்நாள் உணர்த்தல்
     அறிவுஉணர்த்தல் குறிபெயர்த்தல், இறைவாய்மை, நாடுஊர்
இனியபுகழ் மரபுகுலன் கூறல்பகற் குறிநீத்து,
     இரவில்வரவு எனல் இரவில் வரிற்பகல்வா வென்றல்,
புனைஇரவும் பகலும்வா வெனல்,இரவும் பகலும்
     போவெனல்,ஏர் அழிபுஉரைத்தல், ஆற்றச்சஞ் சொல்லே.
                                                [20]

இது வரைவு கடாதலின் விரிவை விளக்குகின்றது.

     உரை: 1. வினவிய தாய்க்கு மறைத்துக் கூறியதை உரைத்தல், 2. ஊரார்
பேச்சு உண்டாகும் என்று அச்சம் உண்டாக்குதல், 3. வெறி அச்சுறுத்தல், 4.
தாய்க்குத் தெரியும் என்று கூறுதல், 5. பிறர் திருமணம் செய்துகொள்ள
விரும்புதலை