உணர்த்தல், 6. அதற்கு எதிர்ப்புக் கூறுதல், 7. திருமண நாள் உணர்த்துதல், 8. (தலைமகளுடைய) அறிவு தலைமகனுக்கு உணர்த்துதல், 9. குறியை மாற்றுதல், 10. தலைவனுடைய வாய்மை, நாடு, ஊர், புகழ், மரபு குலன் ஆகியவற்றைக் கூறுதல், 11. பகலில் வராது இரவு வருக என்றல், 12. இரவில் வந்தால் பகலில் வருக என்று கூறுதல், 13. பகலிலும் இரவிலும் வருக என்று கூறுதல், 14. பகலிலும் போ என்று கூறுதல், 15. அழகு அழிந்ததைக் கூறுதல், 16. வரும் வழியிலுள்ள துன்பத்திற்கு அஞ்சும் அச்சம் சொல்லுதல். விளக்கம் : இது அகப்பொருள் 166 முதல் பதினொன்று வரிவரையுள்ள பகுதியைத் தழுவியது. 105. | ஆற்றுகிலாத் தன்மைஆற்று எனல்,காவன் மிகுதி, ஆசைமிகல் சொலல்கனவு நலிபுஉரைத்தல், இருபான் கூற்றும்வரை வுகடாதல் விரியாகுஞ்; செலவு கூறல்,தடை,நேர்வித்தல், நேர், கலங்கல், வினவல் தேற்றல், ஏழாய்த்; தன்போக்குஉணர்த் தல்,சகிவி லக்கல், செயவேண்டல், விடுத்தல்,அவட்கு உணர்த்தல்,நெஞ்சிற் புலத்தல் சாற்றுசகி தேற்றல்,வந் ததுஉணர்த்தல், நேர்ந்து சகிகோன்றாம் வினவல்,சகி விடை,பன்னொன்று ஒருசார் தணப்பே. [21] | வரைவு கடாதலின் விரியும் ஒருவழித் தணத்தலும் கூறுகின்றது. உரை : 17. பொறுத்துக்கொள்ளமுடியாத தன்மையைப் பொறுத்துக் கொள் என்று கூறுதல், 18. காவல் மிகுதியாக இருப்பதைக் கூறுதல், 19. ஆசை மிகுதியாக இருப்பதைக் கூறுதல், 20. கனவால் துன்பப்படுதலைக் கூறுதல் ஆகிய இருபது கூற்றுக்களும் வரைவு கடாதலின் விரியாகும். 1. சொல்லப்போகிறேன் என்று கூறுதல், 2. அதற்குத் தடை கூறுதல், 3. ஒத்துக்கொள்ளச் செய்தல், 4. ஒத்துக் கொள்ளல், 5. (சென்றவுடன்) கலங்குதல், 6. விசாரித்தல், |