சுவாமிநாதம்195பொருளதிகாரம்
 
7. தேற்றல் என்று ஏழு வகைப்படும் ஒருவழித்தணத்தல், 1. தான் ஊர்க்குச்
செல்லப் போவதைக் கூறுதல், 2. தோழி விலக்குதல், 3. தலைவன்
செல்லவேண்டும் என்று கூறல், 4. தோழி போகவிடுதல், 5. தலைவன்
சென்றதைத் தலைவிக்குச் சொல்லுதல், 6. தலைவி தன் நெஞ்சோடு வருந்திப்
புலம்புதல், 7. தோழி ஆற்றுவித்தல், 8. தலைவன் வந்துள்ளதைக் கூறல், 9.
தோழி தலைவனை வினவுதல், 10. தலைவன் தோழியை வினவுதல், 11. தோழி
விடை கூறுதல் என்ற பதினொரு கூற்றும் ஒருவழித்தணத்தலின் வகைப்படும்.

     விளக்கம் : இது 166.12, 167, 168 ஆகிய அகப்பொருள் சூத்திரங்களை
ஒட்டியது.

     ‘நேர்ந்து சகிகோன் வினவல்’ என்பதைத் தோழி தலைவனை
வினவுதலும் தலைவன் தோழியை வினவுதலும் என இருவகையாகக்
கொண்டது. மொத்தம் பதினொரு கூற்று வர வேண்டும் என்று கருத்தின்
அடிப்படையிலாகும். எனவே நேர்ந்தது என்பது ‘ஒருவரையொருவர்’ என்று
பொருளையும் நேர்தல் என்பது ‘எதிர்’ என்ற பொருளையும் அடியொற்றியது.
நம்பியகப்பொருள் 168ஆம் சூத்திரத்தில் ஒருவழித்தணத்தலின் விரி
பன்னிரண்டு என்று கூற இவ்வாசிரியர் பதினொன்று கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

     நெஞ்சொடு புலம்பலுக்குப் பிறகு வரும் ‘சென்றோன் நீடலிர் காமமிக்க
கழிபடர் கிளவி’ என்ற கிளவியே இங்கு விடப்பட்டுள்ளது.

     இது நம்பியகப்பொருள் 166.11 முதலுள்ள பகுதியையும் 167ஆம்
சூத்திரத்தையும் தழுவியது.