108. | இருவரைவாம், தமர்தரத்த ராதுஇறைவன் மணத்தல்; இதின்முற் கூறேவரைவு மலிவுஅறத்து நிலையாம்; வரைவுமுயல் வுஉணர்த்தல்வரைவு எதிர்வுஉணர்த்தல் வரைவால் மகிழ்தல்என மூவகைத்தாய்க்; காதலுக்குஇகுளை நிருபன்முலை விலைகொடுத்தது உணர்த்தல்அனை மகிழ்ச்சி நினைத்தல்தமர் வரை வுஎதிர்ந்தது உணர்த்தல்கன்னி மகிழ்தல் அரும்இறையைப் புகழ்தல்மணத் தாற்தெய்வம் தொழல் பார்த் தருளகெனல்; கண்டோர்மகிழ்வு ஏழ்வரைவு மலிதலுக்கே. [24] | வரைவும் வரைவு மலிதலும் விளக்குகின்றது. உரை: 1. தலைவியை உறவினர் கொடுக்க மணம் செய்து கொள்ளலும், 2. உறவினர் தராதபோது மணம் செய்து கொள்ளலும் எனத் திருமணம் செய்து கொள்ளல் இருவகைப்படும். 1. வரைவு மலிதல், 2. அறத்தொடு நிற்றல் என இரண்டும் வரைவிற்குரிய கிளவிகள். 1 திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்வதைக் கூறுதல், 2. திருமணம் ஆகப்போவதை உணர்த்தல், 3. திருமணத்தால் மகிழ்தல் என்று மூன்று வகையினை உடையது வரைவு மலிதல். 1. காதலன் முலைவிலை கொடுத்தமையைத் தோழி தலைவிக்குக் கூறுதல், 2. அன்னை பெறும் மகிழ்ச்சியை நினைத்துப் பார்த்தல், 3. உறவினர் திருமணம் ஒத்துக்கொண்டதைத் தோழி தலைவிக்குக் கூறுதல், 4. தலைவி செய்திகேட்டு மகிழ்ச்சி அடைதல், 5. தலைவனைப் புகழ்ந்து கூறுதல், 6. மணம் காரணமாகத் தலைவி கடவுளை வணங்குதலைப் பார்க்கும்படி தலைவனிடம் கூறுதல், 7. தலைவி கடவுளை வணங்குதலைக் கண்ட தலைவன் மகிழ்தல் என ஏழுவகைச் சிறுபிரிவை உடையது வரைவு மலிதல். விளக்கம் : அகப்பொருள் 171, 173, 174 ஆகிய மூன்று சூத்திரங்களையும் தழுவியது. நம்பியகப்பொருள் வரைவு முயல்வு |