உணர்த்தல், வரைவு எதிர்வு உணர்த்தல் வரைவு அறிந்து மகிழ்தல், பராவல் கண்டு உவத்தல் என நான்கு வகையாகக் (சூத். 173) குறிப்பிடுகின்றது. ஆனால் சாமி கவிராயர் ‘பராவல் கண்டு உவத்தல்’ என்ற பெரும் பிரிவை எடுத்துக் கொள்ளவில்லை. பாட விளக்கம் : ‘முற்கூறே வரெவு மலி வறத்தி விலையாம்’ (முதல் வரி) என்ற மூலபாடம், முற்கூறே வரைவு மலிவு அறத்து நிலையாம் என்று திருத்தப்பட்டுள்ளது. 109. | தலைப்படுமுன் னிலைபுறச்சொல் இரண்டாய்மான் கண்ணீர் சகிதுடைத்தல் கலுழ்ஏதுக் கூறல்தெய்வங் காட்டிச் சொலத்தெளிந்தது உணர்த்தல்இகப் புரைத்தல் இயற்பழித்தல் துணிவின்இயற் படுத்தல்தெய்வம் பொறாமைசெய்வோம் என்றல் தலைப்பின்மனைச் செறிப்புஉணர்த்தல் இருள்வருமன் னனைத்தாய் கண்டுஉரைத்தல் இறைவிஅற நிலைஒன்பான் வெறியை விலக்கல்விலக் கனைவினவல் இவள்விகற்பு ஏதுஎனல்பூ வேழ(ம்)நீர்ப் புணர்ச்சிசொலல் ஆறுசகி அறமே [25] | அறத்தொடு நிற்றலை விளக்குகின்றது. உரை: அறத்தொடு நிற்றல் என்பது 1. முன்னிலை மொழியும், 2. முன்னிலைப் புறமொழியும் (முன்னே இருக்கும் போது நேரே கூறாது பிறருக்குக் கூறுவார் போலக் கூறுதல்), என்ற இருவகையை உடையது. அறத்தொடு நிற்றல். 1. தலைவியின் கண்ணீரைத் தோழி துடைத்தல், 2. தலைவி வருந்துவதற்குரிய காரணத்தைக் கூறுதல், 3. தலைமகன் தெய்வத்தைக் காட்டிச் சொன்னதால் தெளிவடைந்ததை உணர்த்துதல், 4. தலைவன் பிரிந்ததைத் தலைவி தோழிக்குக் கூறுதல், 5. தலைவன் பண்புகளை இகழ்ந்து கூறுதல், 6. பின்னர் ஆராய்ந்து உணர்ந்து தலைவன் குணங்களைப் புகழ்ந்து உரைத்தல், |