சுவாமிநாதம்209பொருளதிகாரம்
 
117. உற்றிடுமுத் தொகையினாற்க ளவுவெளிப் படையி
     னுள்வரைவின் துறைஅறுபத் தேழுஆகும்; வரைவு
பெற்றதுதொண் ணூற்றுஒன்றாம்; இல்வாழ்க்கை பரத்தைப்
     பிரிவுஓதற் பிரிவு, காவற்பிரிவு, தூதிற்
சொற்றபிரிவே, துணையிற் பிரிவு, பொருட்பிரிவு, ஏழ்
     தொகைகற்பாம்; அவையில்இறை யோன்மகிழ்வே, இறைவி
பற்றுமகிழ்வே, பாங்கி மகிழ்வு, தாய் மகிழ்வாய்ப்
     பன்னியதுஓர் இல்வாழ்க்கை நால்வகையின் இறுமே.  [33]

இதுவரைவுக்குரிய துறைகளின் தொகையையும் கற்பையும்
விளக்குகின்றது.

     உரை: களவு வெளிப்படும்போது வரைவின் துறை அறுபத்தேழு ஆகும்.

உடன் போக்கு
கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சி
மீள்வரைவு
போக்கு இடையீடு
19
28
6
5
9
   

வரைவு      

67 இதனுடன்
வரைவு மலிதல்
அறத்தொடு நிற்றல்
7
17

                     வரைவு பெற்றது 91.

1. இல்வாழ்க்கை, 2. பரத்தையிற் பிரிவு, 3. ஓதற் பிரிவு, 4. காவற் பிரிவு, 5.
தூதுசொல்லப் பிரிதல், 6. துணை செல்வதற்காகப் பிரிதல், 7. பொருள்
ஈட்டுவதற்காகப் பிரிவு என்ற ஏழுவகையும் கற்பு ஒழுக்கத்திற்கு உரியன
இவற்றில் 1. தலைவன் மகிழ்ச்சியடைதல், 2. தலைவி மகிழ்ச்சியடைதல்,