சுவாமிநாதம்210பொருளதிகாரம்
 
3. தோழி மகிழ்ச்சியடைதல், 4. தாய் மகிழ்ச்சியடைதல் என்று நான்கு
வகையினை உடையது இல்வாழ்க்கை.

     விளக்கம் : கற்பு பற்றிய கருத்துக்கள் நம்பியகப் பொருள் 201, 202,
ஆகிய இரண்டையும் பின்பற்றி எழுந்தன.

118. இறைஇறைவி முன்சகியைப் புகழ்தல்,இறை யவனை
     இகுளைவாழ்த்து தல்வரையு(ம்) நாள்அளவும் வருந்தாப்
பொறை,இறைவி பாற்பாங்கி வினவல்,அவள் உணர்த்தல்,
     பூமானை வரையுமட்டும் பொறுத்தமைகேட் டிடல்,கோன்
அறைதல்,சகி மணமனையில் வருசெவிலிக்கு இருவர்
     அன்புறவு சொலல்,வாழ்க்கை அறைதல்,மண வீட்டிற்
தறுகிவரு செவிலிதாய்க்கு இறைவிமனை வாழ்க்கை
     சாற்றல்,கற்புச் சொலல்,காதல் சொலல்,பதினொன் றாமே.
                                              [34]

இல்வாழ்க்கையின் விரிவுணர்த்துகின்றது.

     உரை: 1. தலைவன் தலைவிக்கு முன்னால் தோழியைப் புகழ்தல்,
2. தலைவனைத் தோழி வாழ்த்துதல், 3. திருமணம் ஆகும் நாள்வரையும்
வருந்தாமல் பொறுத்துக் கொண்டிருந்ததைத் தலைவியிடம் தோழி கேட்டல்,
4. அதற்குத் தலைவி பதில் கூறுதல், 5. தலைவன் திருமணம் முடியுமட்டும்
பொறுத்திருந்தமையைத் தோழி கேட்டல், 6. தலைவன் அதற்குப் பதில்
கூறுதல், 7. தலைவனும் தலைவியும் வாழும் வீட்டிற்கு வந்து இருவருடைய
அன்பான உறவைக் கண்டு அதைச் செவிலிக்குத் தோழி கூறுதல், 8.
அவர்களுடைய இல்வாழ்க்கை நன்று என்று கூறுதல், 9. மண வீட்டிற்குச்
சென்று வந்த செவிலி தலைவியின் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தாய்க்குக்
கூறுதல், 10. தலைவியின் கற்பு நிலையைத் தாய்க்குத் தெரிவித்தல், 11. இருவர்
காதலையும் தெரிவித்தல், எனப்பதினொரு கிளவியும் இல்வாழ்க்கையின்
விரியாகும்.