சுவாமிநாதம்212பொருளதிகாரம்
 
பூப்பெய்தியதை அறிவிக்க அணியும் சிவந்த மலர்) பாவை சேடியர்க்கு
அணிதல் 7. அணிதலைப் பார்த்து ஊரார் வருந்துதல், 8. அதைக்கண்டு
பரத்தையர்கள் பழித்தல்.

     விளக்கம் : இது நம்பியகப்பொருள் 204, 205.9 வரையுள்ள பகுதியை
அடியொற்றியது. ஆயினும் நம்பியகப் பொருள் பரத்தையிற் பிரிவாக நான்கு
கிளவிகளையே கூறியுள்ளது. மகிழ்தல், வினா என்ற இரண்டும் இவர் கூறிய
புதிய கிளவிகள்.

120. பரத்தைஉல கியல், நோக்கி விடல்,விடலில் தலைவன்
     படர்தல்,கண்டு வாயில்கள்கூ றுதல்,பாங்கி இறைவிக்கு
உரைத்தல்,அவள் எதிர்கொண்டு பணிதல், புணர்ந் திடல்
     பத்தொடுநான்கும் உணர்த்தஉணர்ந் திடும்ஊடல் எனவாம்;
இரட்டுறும்வெள் ளணிஅணிதல், அணிந்து விடல் விடுங்கால்
     இறைவாயில் வேண்டல், நெய் யாடியதுஇகு ளைசாற்றல்
தரிப்பின்மன மகிழ்ச்சிஅவன் சொலல்,சகிகோன் வரவு
     தலைவிக்குஓ துதல்,அவள்ஓர்ந்து இறையோடுஊ டுதலே.
                                               [36]

இது உணர்த்த உணர்ந்திடும் வாயில்களையும் உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகளையும் கூறுகின்றது.

9. பரத்தை உலகியல் நோக்கித் தலைவனை விடுதல், 10. அதனால் தலைவன்
வீட்டிற்குச் செல்லுதல், 11. அவன் வருதலைக்கண்டு துணையாக இருப்போர்
(வாயில்கள்) கூறுதல், 12. அதைத் தோழி தலைவனுக்குக் கூறுதல், 13. தலைவி
எதிர் சென்று பணிதல், 14. இருவரும் சேர்ந்திடல் எனப் பதினான்கும்
உணர்த்த உணரும் ஊடலுக்குரிய கிளவிகள் ஆகும்.

     1. வெள்ளணி அணிதல், 2. அணிந்து விடுதல், 3. அப்போது தலைவன்
வாயில் வேண்டல், 4. தலைவி நெய்யாடியது (எண்ணெய் தேய்த்துக்
குளித்தது) தோழி சொல்லுதல், 5. தலைவன் மகிழ்ச்சி அடைவதைச்
சொல்லுதல்,