6. தோழி தலைவனுடைய வரவைத் தலைவிக்குச் சொல்லுதல், 7. தலைவி உணர்ந்து தலைவனோடு புலத்தல். விளக்கம் : முற்பகுதி, அகப்பொருள் 205.9 முதல் உள்ள பகுதியைத் தழுவியது. ஆயினும் அகப்பொருள் உணர்த்த உணரும் ஊடற்கிளவிகள் பதினொன்றே கூறியுள்ளது. 121. | ஊடல்இலா மகவேந்தல் பாணன்முதல் வாயி லோர்வேண்டல், மறுத்தல்முனிந் திடல், பழித்தல், அவர்போய் நீடிறைவர்க்கு உரைத்தல், விருந் தொடுவருகாற் பொறுத்தல் நிருபன்கண்டு உவத்தல்பின் னும்ஊடல்புறங் காட்டல், ஆடவன்ஊ டலைநோக்கிச் சீறேல்என் றவள்சீர் அடிதொழல்ஈது எங்கையர்கண் டிடில்நன்றன்று என்றல் தேடலர்யா ரையும் அறியேன் எனல், காமக் கிழத்தி செலக்கண்ட துணர்த்தல்சகி அவளை ஆற் றுதலே. [37] | உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகளின் ஒரு பகுதி கூறுகின்றது. 8. ஊடல் கொள்ளாத மகவை எடுத்தல், 9. பாணன் முதலிய வாயிலோர் வேண்டுதல், 10. தலைமகள் வாயில் மறுத்தல், 11. கோபித்தல், 12. பழித்தல், 13. பாணர் தலைமகனிடம் சென்று சொல்லுதல், 14. தலைவன் விருந்தினர்களோடு வரும்போது தலைவி பொறுத்துக்கொள்ளுதல், 15. தலைவன் அதைக்கண்டு மகிழ்ச்சி அடைதல், 16. பின்னர் தலைவி ஊடுதல், 17. புறங்காட்டுதல், 18. தலைவன் தலைவியின் ஊடலைக்கண்டு கோபித்துக்கொள்ளாதே என்று அவள் அடியை வணங்குதல், 19. இந்நிகழ்ச்சியைத் தன்னுடைய சகோதரியர் கண்டால் நல்லது அல்ல என்று தலைவி கூறுதல், 20. யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறுதல், 21. காமக்கிழத்தி சென்றதைத் தான் பார்த்து உணர்த்தல், 22. தோழி தலைவியை ஆற்றுதல். |