பாட விளக்கம் : ‘இரைவர்க்கு’ (2-வது வரி) என்ற மூலபாடம் இறைவர்க்கு என்று திருத்தப்பட்டுள்ளது. 122. | ஆறுகிலா,து ஊடல்,பா லனைப்பழித்தல், அதுகண் டவன்ஊடல், கொடியைஎனச் சகிஅவனை இகழ்தல், கூறுஇருபா னாறுஉணர்த்த உணராஊ டலதாம், கோதைமைந்தன், ஆற்றாமை வாயில்களாய் வருங்கால் தேறிஎதிர் கொளல், மணத்தல், மணந்தவன்போ கியபின் சேர்த்தபுதல் வனைப்புகழ்தல் சகிஅவளைப் புகழ்தல், ஏறியநாற் றுறைஉணரா ஊடல்நீக் குதலாம் இவைநாற்பான் நான்குமதன் விரிவெனப்பே சுவரே. [38] | உணர்த்த உணரா ஊடற்கிளவியில் ஒரு பகுதியும் ஊடற்கிளவியின் ஒருபகுதியும் ஊடல் நீக்குதலுக்குரிய கிளவியும் விளக்குகின்றது. உரை : 23. பொறுத்துக்கொள்ளாது ஊடல், 24. மகனைப் பழித்தல், 25. அதைக்கண்டு தலைவன் ஊடல், 26. கொடியவன் என்று தோழி தலைவனைக் கூறுதல் என்ற இருபத்தாறு கிளவியும் உணர்த்த உணரா ஊடலுக்குரிய கிளவிகளாய்ப் பரத்தையிற் பிரிவின் கண் நிகழும், 1. மகனும் (தந்தையின் பிரிவைப்) பொறுத்துக் கொள்ளாததன் காரணமாகத் தலைவன் வீட்டிற்கு வரும்போது தலைவியின் மனம் அமைதிப்பட்டு ஏற்றுக்கொள்ளுதல், 2. மணத்தல், 3. புணர்ந்து நீங்கியபின் தலைவனைத் தன்னோடு சேர்தற்குக் காரணமான புதல்வனைப் பாராட்டுதல், 4. தோழி தலைவியைப் புகழ்தல் என்ற நான்கும் ஊடல் நீக்குதற்குரியன. உணர்த்த உணர்த்திடும் ஊடலுக்குரிய பதினான்கு வகையும் உணர்த்த உணரா ஊடலுக்குரிய இருபத்தாறு வகையும் ஊடல் நீக்குதலுக்குரிய நான்கு வகையும் சேர்த்து வரும் நாற்பத்து நான்கு வகையும் பரத்தையிற் பிரிவுக்குரிய விரியாகும். விளக்கம் : மேலே இரண்டு சூத்திரமும் இதுவும் அகப்பொருள் 206, 207 ஆகிய இரண்டையும் தழுவியன. |