சுவாமிநாதம்215பொருளதிகாரம்
 

உணர்த்த உணரா ஊடற்கிளவிகளாக நம்பியகப்பொருள் (206 இல்)
பதினைந்து கிளவிகளே பேசுகின்றன.

123. பேசுபிரிவு, அறிவுறுத்தல், பிரிவுஉடன்படாமை
     பிரிவைஉடன் படுத்தல்,உடன் படுதல்பிரி கலக்க(ம்)
மாசறுவன் புறையேவன் பொறைவருங்கால் கலக்கம்
     வந்தவழி மகிழ்ச்சிஎன்று ஒன்பான்வகையாகுங்
வீசுகல்வி முதலாம்வ கைப்பிரிவும் வகையே
     விரியாய்ஐ யொன்பானாம் அகப்புறமும் கலப்பாம்
தேசுயர்கற் பிடைத்துறைநூ றாம்கைகோள் இரண்டில்
     சேர்க்கும்அகப் பொருள்துறைநா னூற்றெண்பா னான்கே.
                                              [39]

இது பிரிவு வகைகளை உணர்த்துகின்றது.

     உரை: 1. தலைவன் தான் பிரியப் போகின்றேன் என்று கூறுதல், 2.
அதற்குத் தலைவி ஒத்துக்கொள்ளாமை, 3. தலைவன் ஒத்துக்கொள்ளும்படிச்
செய்தல், 4. தலைவி ஒத்துக்கொள்ளுதல், 5. தலைவன் பிரிந்த போது
கலங்குதல், 6. (தோழி) பிரிவைப் பொறுத்துக்கொள்ளும்படி வற்புறுத்திக்
கூறுதல், 7. தலைவி பொறுத்துக் கொள்ளுதல், 8. தலைவன் வரும்போது
வருத்தப்படுதல், 9. வந்தபோது மகிழ்ச்சியடைதல் என்னும் ஒன்பது
வகையினை, கல்விப்பிரிவு, காவற்பிரிவு, தூதிற்பிரிவு, துணை வயிற்பிரிவு,
பொருள் வயிற்பிரிவு என்ற ஐந்து வகைப்பிரிவுகளும் உடையன. இந்த
நாற்பத்தைந்து வகையும் அகப்புறத்தைச் சார்ந்தது. கற்பிற்கு உரிய துறைகள்
நூறு (இல்வாழ்க்கைக்குரியது 11, பரத்தையிற் பிரிவுக்குரியது 44, ஏனைய
பிரிவுக்குரியது 45); ஆக மொத்தம் அகப்பொருள் துறை
நானூற்றுஎண்பத்துநான்கு.

     களவியல்   293
     வரைவியல்   91
     கற்பியல்    100

               484