சுவாமிநாதம்219பொருளதிகாரம்
 

இது இடம், காலம், மெய்ப்பாடு, எச்சம், பயன், முன்னம் ஆகியவற்றை
விளக்குகின்றது.

     உரை: செயல் நிகழும் இடமே ‘இடம்’ எனப்படும். உலகத்திலுள்ள
பொருள்களை அறிந்துகொள்ளும்படியாக நடப்பது இறப்பு (இறந்த காலம்)
நிகழ்வு (நிகழ்காலம்) எதிர்வு (காலம்) என்ற மூன்றும் ‘காலம்’ ஆகும்.
அறிந்துகொள்ள முடியாதார் அவ்விடத்துத் தோன்றும் குறி (அடையாளம்)
யால் பொருள் தெரிந்துகொள்ள வைப்பது ‘மெய்ப்பாடு’ எனப்படும். அவை
1. அழுகை, 2. நகை, 3. மருட்கை, 4. அச்சம், 5. பெருமிதம், 6. உவகை,
7. சினம், 8. இளிவரல் என எட்டு வகைப்படும். சொல்லாலும் (உரை),
குறிப்பாலும் கூட்டிப்பொருள் முடித்தல் வேண்டி நிற்பது ‘எச்சம்’ எனப்படும்.
இதனால் உண்டாகும் பயன் இது என்று பொருளைத் தொகுத்துச் சொல்லுதல்
ஆகும். இதுவே பயன் இந்த இடத்தில் இத்தன்மை உடையவர்களுக்கு இது
உரியது என்று எண்ணுவது ‘முன்னம்’ எனப்படும்.

     விளக்கம் : நம்பியகப்பொருள் 227, 228, 231, 232, 229, 230 என்ற
சூத்திரவரிசையைத் தழுவி எழுதப்பட்டது. இச் சூத்திரம். ஆயினும்
அகப்பொருளில் எட்டுவகை மெய்ப்பாடு என்ன என்று விளக்கப்படவில்லை.
இவர் தொல்காப்பியத்தை ஒட்டி (மெய்ப் பாட்டியியல் 3) அவற்றை விரித்துக்
கூறியுள்ளார்.

128. முன்உரைத்த திணைக்குரிமை, இதற்குஇதுஎன்று இல்லாமல்
     மொழிந்ததிணை எவற்றினுக்கும் பொருட்படவே பொது
                                           வாய்ச்
சொன்னிலைமைப் படச்செய்தல், பொருட்கூறு பாடாற்;
     துறைஐந்து நிலத்தினுக்கும் உரியகருப் பொருளும்