வீரசோழியமும் அதையொட்டி நேமிநாதமும் 1லு மாத்திரை என்று கூறியுள்ளன. இது ஐகாரம் ‘அய்’ காரமாக ஒலிப்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் ஐகாரம் தன்னளவிற் சுருங்கி ஒன்றரை மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகக்குறுகும் (பக்:15) என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர இடம் குறிப்பிடவில்லை. சுவாமிநாதம் மொழி முதலிலும், இறுதியிலும் 1லு மாத்திரை பெறும் என்றும், இடையில் 1 மாத்திரை பெறும் என்றும் 20 ஆம் சூத்திரத்தில் குறிப்பிட்டது தனிச் சிறப்பாகவே கொள்ள வேண்டும். ஒளகாரக் குறுக்கம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. ஒளகாரம் குறுகி வேறொரு ஒலியாக வரவில்லை. அவருக்கு ‘அவ்’ என்று வருவது குறுக்கம் ஆகாது. (அதுபோலவே ஐகாரம் ‘அய்’ என்று வருவதை அவர் ஐகாரக் குறுக்கமாகக் கருதவில்லை) தொல்காப்பியர் ஐகாரக் குறுக்கம் சொன்னதால் ஒளகாரக் குறுக்கமும் சொல்லி விட்டார்கள். இது எல்லா ஆசிரியர்களிடத்தும் காணப்படுகின்றது. ஆயினும் ‘அய்’ என்பதை ஐகாரக்குறுக்கம் என்று கொண்டது போல, ‘அவ்’ என்பதை ஒளகாரக் குறுக்கம் என்று கொள்ளலாம். பௌவம் என்பது பவ்வம் (புறம்: 380.1, குறுந்தொகை 164.4) என்றும் கௌவை என்பது கவ்வை (பத்துப்பாட்டு 6.721) என்றும் சங்க இலக்கியத்திலும் வந்துள்ளது. அதனால் 1லு மாத்திரை பெறும் என்பது அவர் கருத்துப்படி ஒத்துக் கொள்ளத் தக்கது. எனவே நன்னூலார் ஒளகாரத்திற்கும் ஐகாரக் குறுக்கம் போல ஒரு மாத்திரையே பெறும் என்றது ஆராய்ச்சிக்குரியது. இங்கு ஒளகாரக் குறுக்கம் என்பது |