இதனுடைய ஒலித்தன்மை இன்னும் விளங்கவில்லை. மகரக் குறுக்கம் என்பது மகரம் முழுமையாக உச்சரிக்கப்படாத ஒலியையும் மூக்கொலிச்சாயல் பெற்றுவரும் ஒலியையும் குறிக்கும். இதைப் பொதுவாக மூக்கொலிசாயல் (Nasalisation) என்று கொள்ளலாம். போலும் > போன்ம் மருளும் > மருண்ம் இங்கு மகரத்தின்மேல் இன்னொரு மெல்லொலி வருவதால் அந்த மெல்லொலிக்குப் பிறகு வரும் மகரம் முழுமையாக உச்சரிக்கப்படுவதில்லை. தரும் + வளவன் என்ற புணர் மொழியில் மகரம் மறைந்து மேலுள்ள உயிர், மூக்கொலிச் சாயல் பெறுகின்றது. எஃகு வெஃகாமை | | ஆய்தம் | ஆய்தம் என்பது தனி ஒலியைக் குறிக்காது. இது பொது ஒலித் தன்மை உடையது. எனவே அடிநிலைஒலி (Anchisegment) என்பார் பாலசுப்பிரமணியம் (தொல்காப்பியரின் ஒலியனியல் கொள்கை) அதாவது உயிர், மெல்லொலி என்பன போன்று ஆய்தமும் ஒரு பொதுத்தன்மையைப் பெற்று வருமிடத்திற்கே மாறி அமைந்து வரும். வல்லெழுத்தை அடுத்து வருவதால் ஆறுவகை வல்லெழுத்தும் திரிந்து வரும் ஆறு ஒலியாகவே கொள்ள வேண்டும். கூய்ப்பர், |