சுவாமிநாதம்222புறத்திணை மரபு
 
கூட்டங்களைக் கவர்ந்து வரும்படி வீரர்களுக்குச் சொல்லுதல், 3.
அவ்வீரர்கள் மகிழ்ச்சியுடன் அரசன் கட்டளையை ஏற்றுக் கொள்ளுதல், 4.
படை செல்லும் ஒலி கேட்டல், 5. நல்ல நிமித்தம் உண்டாகிறதா என்று
ஆராய்தல், 6. அந்நிமித்தம் பற்றிக் கவலைப்படாத வீரர்கள் மேலும்
தொடர்ந்து செல்லுதல்.

விளக்கம்.

     வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என ஐந்தையும் ஒன்றாகப் பிரித்தது அவை ஐந்திணைக்கு (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை) உரிய புறத்திணைகள் என்று பிரித்துக் காட்டுதற்காக இருக்கலாம். காஞ்சி பெருந்திணை ஆகியவற்றிற்குரிய அகத்திணைகள் முறையே பெருந்திணை, கைக்கிளை எனப்படும்.

130. வேயுரை,வேய்ப் புறத்துஇறை,ஊர் கொலையாகோள், பூசல்
     விலக்குஇடர் இன்று உய்த்தல்,நுவல் வழித்தோற்ற
                                         நிறைத்தல்,
ஆய்நிரைப்பா தீடு,உண்டாட்டு, ஈகை புலனே
     அறிசிறப்புப், புள்வழக்குத், துடிநிலைகொற் றவைசீர்,
காயும்வெறி யாட்டுஇருபத் திரண்டாம்ஆன் மீட்சி
     கரந்தைநிரை கோள்கேட்டோன் மறவரைமீட் கென்றல்,
சேயபடை யொலிபறவாப் புட்டெரிதல், நடையிற்
     செல்லு,சாப் புறத்துஇறை,போர் புண்ணோடுவந் திடலே
                                               [2]

வெட்சியின் ஒரு பகுதியும் கரத்தையின் ஒரு பகுதியும் கூறுகின்றது.

     உரை: 7. ஒற்றன் (பகை நாட்டின் நிலைமை) கூறுதல், 8. பகை அரசன்
நாட்டுப்புறத்துச் சென்று தங்குதல், 9. ஊரை அழித்தல், 10. பசுக்களைக்
கவர்ந்துகொள்ளுதல், 11. பகைவருடைய போரை விலக்குதல் (போர் முடிந்து
போதல்) 12. பசுக்களுக்குத் துன்பம் நேராதபடி கொண்டு