129. | அகங்கண்டார் புறங்காண்பார், புறத்தின்அறம் பொருளாய் அறிஞர்காண் புறத்தொழுக்காம், வெட்சி, வஞ்சி, உழிஞை, திகழ்ந்ததும் பை,வாகை ஐந்துகாஞ்சியேபா டாண் டிணை இரண்டுந் தொகுத்துஏழும் புறப்பொருளாம் அவற்றின் மிகுங்குறிஞ்சிப் புறம்வெட்சி, அதில்ஆதந் தோம்பல், வேந்தன்வய வரைமருவார் நிரைகவர்கொன் றுரைத்தல், உகந்துபணி தலைக்கோடல், படை,அரவம், விரிச்சி ஓர்தல்,வேண்டாவீர மறவர்வழிச் செலவே. [1] | புறத்திணையின் பொது விளக்கமும் அதன் வகையும் வெட்சியின் விரியும் விளக்குகின்றது. உரை: அகத்தை அறிந்து கொண்டவர்கள் புறத்தையும் அறிந்து கொள்ள விரும்புவர். புறத்திற்கு அறமும் பொருளும் பாடற் பொருளாகும் அது. 1. வெட்சி, 2. வஞ்சி, 3. உழிஞை, 4. தும்பை, 5. வாகை, 6. காஞ்சி, 7. பாடாண்திணை என ஏழு வகைப்படும். குறிஞ்சித் திணைக்குப் புறமாக வருவது வெட்சித்திணை, இத்திணையில் 1. பசுக்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து பாதுகாத்தல் 2. அரசன் தன் பகைவருடைய பசுக் |