விரும்பிக் கெஞ்சிக்கேட்டல், 42. அவன் அணிந்த மாலையை விரும்புதல், 43. அவனைத்தழுவமாட்டோம் என்று கூறுதல், 44. வேண்டா வெறுப்பு, 45. அரசனுடைய விருப்பத்தை உரைத்தல், 46. புறநிலை, 47. வாயுறை வாழ்த்து, 48. அரசன்செய்யவேண்டிய நல்ல செயல்களை எடுத்துச் சொல்லுதல், ஆகிய நாற்பத்தெட்டும் பாடாண் திணைக்குரிய துறைகளாகும். இந்த ஏழுதிணைக்குரிய பொதுவானதையும் ஏனையவற்றையும் ஒழிபு என்று கொள்ளவேண்டும். விளக்கம் : புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் துறைக்கு 48 துறைகள் (சூத். 9) கூறியிருப்பினும் அதன் வகையில் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. 147. | உன்னநிலை, இளமையின்வேந்து, இயற்கைகழல்புனைதல் ஊக்கத்துஏ ழகநிலைபட்ட வற்கேகற் காண்டல், அன்னகற்கோ ணிலைகன்னீர் படுத்திடல்கற் காண்டல், அணிக்கன்னாட் டுதலேகன் முறைபழிச்சல், கல்லைத் தன்னகத்திற் கொடுபுகுதல், கணவனையே இழந்தாள் தளருமுது பாலைசுரத் திடைப்பன்னி இழந்து மன்னிரங்கு சுரநடைபெண் இழந்துவீட் டிருந்தோன் வாடுதல்நி லையுரைத்த தபுதார நிலையே. [19] | பொதுவியலுக்குரிய துறைகளை இதுவும் அடுத்த சூத்திரங்களும் கூறுகின்றன. உரை : 1. அரசனை நிமித்தம் பார்க்கும் மரத்தோடு சேர்த்து மிகு புகழைச் சொல்லும் உன்னநிலை, 2. அரசன் இளையவனாக இருக்கும் பண்பு கூறுதல், 3. அரசன் கழலைப் புனைந்து கொள்ளுதல், 4. ஏழகத்தகரினை மேற்கொண்டு செலுத்தினும் இத்தன்மையன் என்று அவன் ஊக்கத்தை மிகுத்துச்சொல்லுதல், 5. போரில் இறந்தவர்க்குக் கல்நடுவதற்குக் கல்லைத் தேர்ந்தெடுத்தல், 6. அந்தக்கல்லை எடுத்துக்கொள்ளுதல், 7. அந்தக்கல்லை நீராட்டுதல், 8. கற்காண்டல், 9. அந்தக்கல்லை நடுதல், 10. கல்லைப் |