சுவாமிநாதம்239புறத்திணை மரபு
 

பாராட்டிப்புகழ்ந்து கூறுதல், 11. அக்கல்லைத்தன் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு
போதல், 12. கணவனை இழந்தவள் வருந்தும் தன்மையைக்கூறும் முதுபாலை,
13. பாலைவனத்தில் தலைவியை இழந்து வருந்தும் தலைவன் நிலையைக்
கூறும் சுரநடை, 14. மனைவி இறந்தபின் தனியே வீட்டில் இருந்து வாடும்
கணவனின் நிலையைக்கூறும் தபுதாரநிலை.

148. தாரம்இறை இறந்தபின்தா பதநிலை,சேய் ஈன்றாள்
     சாய்ந்ததலைப் பெயர்நிலை,சேய் மாய்ந்ததிணை மயக்கம்,
பாரரசை இழந்துஇரங்கல், சொல்லிடையீட் டாலே
     பாரிஈமத்து எரிமூழ்குதல்,இறையோடு இறந்த
நாரியைக்கண் டவர்அழுமூ தானந்தம் தொழிலும்
     நடவாது கனைகுழிப்பப் படுமூதா னந்தம்
ஓர் நிமித்தம் பொய்ப்பவிதும் பானந்தம் இறைவிண்
     உற்றுமிருந் தேன்என்னும் ஆனந்தத் துயரே       [20]

     உரை : 15. கணவன் இறந்தபின் வருந்தும் மனைவியின் நிலையைக்
கூறும் தாபத நிலை, 16. மகப்பேறு பெற்றபின் இறந்த மாதரின் நிலை
கூறும் தலைப்பெயர் நிலை, 17. சேய் மாய்ந்த திணைமயக்கம், 18. அரசனை
இழந்து  வருத்தப்படுதல், 19. அரசி சுடலை நெருப்பில் மூழ்கி இறத்தல், 20.
அரசனோடு இறந்த அரசியைக் கண்டவர்கள் அழுது அதிசியத்துக் கூறும்
மூதானந்தம், 21. நல்ல நிமித்தம் ஏற்படாததால் பயப்படும் நிலை கூறும்
ஆனந்தம், 22. தலைவன் இறந்தும் தலைவி தான் இறவாமல் இருக்கிறேன்
என்று கூறும் ஆனந்தத்துயர்.

149. துயரின்அடுத் தோர்அழுங்கை யறுநிலை,போர்க் களத்தில்
     துஞ்சினோர்க்குஇரங் கல்,பட்டோன் புகழைஇச்சித்து
                                         உரைத்தல்
அயர்வில்அறமுதலசொலு முதுமொழி,கூற்று உறுமுன்
     அறஞ்செய்மின் என்றல்நிலை யாமைகோ னிழந்த
கயல்விழிநாண் துணையின்உறல் நிறைகாப்பின் உறுதல்,
     கற்புமுல்லையே, புணர்பால்முல்லை, இல்லாண்டு முல்லை,
உயர்காடு வாழ்த்து,ஈவார் துதித்து,ஈயார் பழித்தல்,
     உந்தி, கடை திறப்பு,இடைமை, வலைமை, குறந் தவமே.
                                               [21]