(நேர்,நிரை) சீர்மூன்று வகை (இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர்), தளை ஏழுவகை      (வெண்டளை இரண்டு, ஆசிரியத்தளை இரண்டு, கலித்தளை ஒன்று,      வஞ்சித்தளை இரண்டு), அடி ஐந்து வகை (குறளடி, சிந்தடி, அளவடி,      நெடிலடி, கழிநெடிலடி) பொருந்திய தொடை ஐந்து (மோனை, இயைபு,      எதுகை, முரண், அளபெடை); தொடையின் விரி 48. பாக்கள் நான்குவகை      (வெண்பா, ஆசிரியம், கலி,வஞ்சி) மூன்று வகை இனங்கள் (தாழிசை, துறை      விருத்தம்) ஆகியவை சேர்ந்து நடை பெறுவது யாப்பினுடைய தன்மையாம்.      குற்றெழுத்துத் தனித்து வரினும், நெட்டெழுத்துத் தனித்து வரினும்,      குற்றெழுத்து மெய்யெழுத்தை அடுத்து வரினும், நெட்டெழுத்து      மெய்யெழுத்தை அடுத்து வரினும், நேரசையாகும். எனவே நேரசை நான்கு;          இரண்டு குறில் சேர்ந்து வந்தாலும், அவை    மெய்யெழுத்தை அடுத்து      வந்தாலும், ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து    வந்தாலும், அவை      மெய்யெழுத்தை அடுத்து வந்தாலும், நிரையசை ஆகும்.    எனவே நிரையசை      நான்கு; ஆக இரண்டும் சேர்ந்து அசை எட்டாகும்.          விளக்கம்     : யாப்பருங்கலம், யாப்பின் உறுப்புக்கள் எழுத்து, அசை,      சீர், தளை, அடி, தொடை, பா என ஏழு வகைப்படும் என்று பகுக்கும்,      யாப்பருங்கலக்காரிகை இவ்வேழுடன் பாவினமும் சேர்த்து எட்டு என்று      கூறும். சாமிகவிராயரும் பாவின் உறுப்பு எட்டு என்றே கூறியுள்ளார்.                        |         153.  |         அசைஇரண்டாய்,         நான்குஇயற்சீர் அகவற்காம்; உரிச்சீர்               அசைமூன்றாய், எட்டாம்;நேர் ஈறுவெள்ளை; நிரைஈறு          அசையும்வஞ் சிக்கு;ஓரசைச் சீர்இரண்டு,நா லசைச் சீர்               எண்ணிரண்டும் பொதுவு,இவை முப்பான்சீர்ஏழ் தளைகள்          நிசவிளமுன் நிரைமாமுன் நேர்அகவல் தளைமா               நிரைவிளநேர் இயற்றளைகாய் முன்னேர்வெண்                                               டளையாம்,          வசிகாய்முன் நிரைகலியின் தளைகனிமுன் நிரைநேர்               வஞ்சிக்காம் நிழல்கனிபூக் காய்பொதுச்சீர் தளைக்கே. [2] |                  |