விளக்கம் : கி. கீ போன்ற இகர ஈகார வரிசைகள் மேல் விலங்கு பெற்றன. கு, கூ போன்ற உகர ஊகார வரிசைகள் கீழ் விலங்கு பெற்றன. தீர்க்கம் என்பது நெட்டெழுத்தைக் குறிக்கும். ஆனால் இங்கு கால் என்று கூறப்படும். ‘£’ என்ற வடிவத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். புள்ளி விட்ட உருவே அகரம் ஏறிய வடிவம் என்பது தெளிவாக்கப் பெறவில்லை. ஏனைய உயிர் ஏறும் போது ஏற்படும் வடிவமாற்றத்தையும் முழுமையாகக் கூறவில்லை. ஆகார வரிசை காலும், எகரமும் ஏகாரமும் கொம்பும், ஒகரஓகாரமும் கொம்பும் காலும்பெற்று வருகின்றன. க என்பதை க் + அ என்பதால் மெய் முன்னும் உயிர் பின்னும் வந்துள்ளது. உயிர்மெய், உயிரும் மெய்யும் சேர்ந்ததாயினும் உயிரின் மாத்திரையை மட்டுமே பெறுவதால் தனிச் சார்பெழுத்தாகக் கொண்டனர். எனவே உயிர்மெய்யும் ஒரு குறுக்கமாகக் கருதப்பட்டு விட்டது என்பதே பொருள். ஆயினும் உயிர்மெய் என்பது ஒரு தனி ஒலியாகக் கருத முடியாது. சிவஞான முனிவரும் அது பற்றி விளக்கமாக ஆராய்ந்து இறுதியில் உயிர்மெய்யின், ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமையாலும் (முதற் சூத்திர விருத்தி ப. 33) சார்பெழுத்தாகக் கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார். உயிரளபெடைக்குத் தனி மாத்திரையே சொல்லாததால் இவரும் உயிரளபெடை நெடிலும் குறிலும் சேர்ந்த கூட்டெழுத்தாகக் கொள்கிறார் என்பது தெளிவு. செய்யுளில் அளபெடை சீர்நிலை எய்தி நெடிலும் குறிலும் தனித்தனி அசையாக வருவது. ....திறப்பாடி லாஅதவர் - குறள்: 640 என்ற சீரில், லா என்பது ஒரு அசையாகவும் அ என்பது அடுத்த அசையாகவும் அமைந்துள்ளன. அவ்வாறே வீழப்படுவர் (1164) என்ற குறளில் கெழீஇயலர் என்பதில் உள்ள அளபெடை அலகுபெறாது வந்துள்ளது. சீர்நிலைபெறாது ஒரே அசையாக வருவதும் இலக்கியங்களில் காணப்படுவதால் |