சுவாமிநாதம்250யாப்பதிகாரம்
 

வந்து தனிச்சொல் இல்லாமல் நான்கடியாய் வருவது இன்னிசை வெண்பா.
மூன்று அடியால் இன்னிசை வெண்பாப் போல (அதாவது தனிச்சொல்லின்றி
ஒரு விகற்பமாயும் பல விகற்பமாயும் வருவது) இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
மூன்று அடியால் நேரிசை வெண்பாப்போல் (அதாவது இரண்டாவது அடியில்
தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தாலும் ஒரு விகற்பத்தாலும் வருவது)
நேரிசைச் சிந்தியல் வெண்பா. ஐந்துஅடிமுதல் பன்னிரண்டு அடி அளவும்
பெற்று வருவது பஃறொடை வெண்பா. பன்னிரண்டு அடிக்கு மேற்பட்ட
வெண்பாவினைக் கலிவெண்பாவாகக் கொள்ள வேண்டும்.

157. வெள்ளொத்தா ழிசைஅடிமூன்று ஈற்றடிமுச் சீராம்
     வேற்றுஒலிகீழ் குறையாகி அடிமூன்று முதல்ஏழ்
உள்ளுற்றால் வெண்டுறையா(ம்), மூன்றடிநான் கடிஈற்று
     ஓர்தனிச்சொல் பெறுதல்வெளி விருத்த(ம்) மூன்று
                                        இனமா(ம்)
துள்ளுற்ற குறட்குஇனம்செந் துறையொடுதா ழிசையாம்;
     சொல்அகவல் இசைஐந்துஈறு அளவடிஆ சிரிய(ம்);
நள்ளுற்ற ஈற்றயல்சிந் தேற்றி(ன்)நே ரிசைப்பா
     நான்கடியு(ம்) மாறிவரில் அடிமறிமண் டிலமே.    [2]

வெண்பாவின் இனமும் ஆசிரியப்பாவின் வகையும் கூறுகின்றது.

     உரை : வெள்ளொத்தாழிசை, அடிமூன்று உடையதாய் இறுதிஅடி
மூன்று சீர் உடையதாய் அமையும்.

     வெண்டுறை, ஓர் இசையாயும் முன் ஓர் இசையாய்ப் பின் ஓர்
இசையாயும் சீர்கள் குறைந்தும் மூன்று முதலாக ஏழு அடிவரை வரும்.
வெளிவிருத்தம் மூன்று அடியாலும் நான்கு அடியாலும் ஒவ்வொரு அடியின்
இறுதியிலும் தனிச்சொல் பெற்று வரும். வெள்ளொத்தாழிசை, வெண்டுறை,
வெளிவிருத்தம் ஆகிய மூன்றும் வெண்பாவுக்கு