சுவாமிநாதம்260யாப்பதிகாரம்
 

     விளக்கம் : கிளைச்சீர் வகுப்பு என்பது ஒரு பொருளைப்பற்றி
எண்சீர்க்கு மேற்பட்ட அடிகளால் அடுக்கி வண்ணம் அமையப் பாடுதல்
ஆகும்.

     பாட விளக்கம் : களங்கமனை (1வது வரி) என்ற மூலபாடம் ‘கழங்கு
அம்மனை’ என்று கொள்ளப்பட்டுள்ளது.

168. இயல்உலாவினில் ஆசைபிற ரொடுசொற்றுஇ ரங்கல்
     இவைபவனிக் காதல்;அவை மிக்கதுஇன்ப மடலாம்
உயரும்ஆண்பா லவர்அவாறு இரங்கல்வள மடலாம்;
     உற்றதுஉரைப்பு அனுராக மாலையா ரொடுந்தம்
மயல்உரைத்த லேவிரக மாலை;கன வினிற்சேர்
     மங்கையரான்மடல்கூற்று உலாமடல்வெண் பாவாம்
பயிலும்ஓர்பாட் டாய்நூறுஉரைப் பதுதான் சதகம்
     பப்பத்தாய் எத்துறையும் பாடல்ப திகமதே.    [7]

பவனிக் காதல், இன்பமடல், வளமடல், அனுராகமாலை, கிரகமாலை,
உலா மடல், சதகம், பதிகம், ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றது.

     உரை: தலைவன் உலா வரும்போது தன்னுடைய விருப்பத்தைப்
பிறரிடம் சொல்லி வருத்தப்படுதல் பவனிக்காதல் எனப்படும். காதல்
மிகுதியாவதைக் கூறுவது இன்ப மடல். அச்சமயத்தில் ஆண்கள் அவ்வாறு
வருத்தப்படுதல் வளமடல். தனக்கு நேர்ந்தவற்றைக் கூறுவது அனுராகமாலை
எல்லோரோடும் தம்முடைய காதலை எடுத்துக் கூறுவது விரகமாலை.
(தலைவனைக்) கனவினிற்கண்ட மடந்தையர் தலைவனை அடைவதற்காக
மடல் ஏறுவதாகப் பாடுவது உலாமடல். இது கலிவெண்பாவால் வரும். நூறு
பாடல் ஒரு யாப்பில் பாடுவது சதகம். எந்தப்பொருள் பற்றியும் பத்துப்பத்துப்
பாடலாய்ப் பாடுவது பதிகம்.