சுவாமிநாதம்262யாப்பதிகாரம்
 
தோய்ந்தபாவி னமுழுதும் பலதுறையும் வகுப்புஞ்
     சொற்றொடராம் கலம்பகம்;சில் குறைபன்மணி மாலை
ஏய்ந்தநூற மரர்தொண்ணூறு ஐயர்எண்பான் அரசர்
     எழுபதமைச்சு அறுபதுஇப்பர் ஐம்பதுசூத் திரர்க்கே  [9]

அந்தாதி கலம்பகம், கன்மணிமாலை முதலியவற்றின் இலக்கணமும்
வகுப்பு அடிப்படையில் பாட்டின் தொகையும் கூறுகின்றது.

     உரை : வெண்பாவால் அந்தாதித் தொடை வரப்பாடுவது வெண்பா
அந்தாதி. கலித்துறையால் அந்தாதித் தொடை வரப்பாடுவது கலித்துறை
அந்தாதி. விருத்தப்பாக்களால் அந்தாதித் தொடையில் பாடுவது
விருத்தத்தந்தாதி. பத்துப்பத்துப் பாடல்களாக அந்தாதித் தொடையில்
பாடுவது பதிற்றுப்பத்து அந்தாதி.

     கலிப்பாவும், வெண்கலித்துறையும் முதலிலும் பின்னர் பாவினங்கள்
முழுமையும் பல துறையும் வகுப்பும் தொடரப் பாடுவது கலம்பகம். இவற்றில்
சில குறைந்தால் அது பன்மணி மாலை எனப்படும்.

     நூறு பாடல் தேவர்களுக்கும், தொண்ணூறு ஐயர்க்கும் எண்பது
அரசர்க்கும் எழுபது அமைச்சர்க்கும் அறுபது வணிகர்க்கும் ஐம்பது
சூத்திரர்க்கும் பாடுவர்.

     விளக்கம் : வெண்பாப்பாட்டியல் செய்யுளியல் 10, 12 சூத்திரங்களில்
கூறியதைத் தழுவியது.

171. திரமுறுகொச் சகப்பாவில் இரண்டடிஏ றாமல்
     சேர்காப்புக், கடைதிறப்புப், பாலைச்சீர், காளி
அருமனைச் சீர்பேய்நிலை,பேய் மொழி,காளி மொழியே,
     அரசன்சீர் எழுச்சிபொர லடுதல் களம் வேட்டல்,
மருவுபுறப் பொருள்சிறப்ப ஒருதினத்துஆ யிர(ம்) மா
     வதைத்தவர்க்குப் பாடுதலே பரணி;அப்பா வினிலே
குரிசில்வெற்றி பாடுதலே திக்குவிசை யந்தான்;
     கொண்டமயல் ஈரடிக்கண் ணியில்இசைகா தலுக்கே.  [10]

பரணி, திக்குவிசையும், காதல் ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றது.