சுவாமிநாதம்263யாப்பதிகாரம்
 

     உரை : கொச்சகக் கலிப்பாவால் இரண்டடி ஏறாமல் காப்பு.  கடை
திறப்பு, பாலைநிலத்து இயல்பு, பேய்நிலை, பேய்மொழி, காளிமொழிதல்,
அரசன் போருக்கு எழுதல், வெற்றி பெறல், களவேள்வி ஆகிய
புறத்திணைக்குரிய பொருள் சிறக்கும்படி ஒரு நாளில் ஆயிரம் யானையைக்
கொன்றவரைச் சிறப்பித்துப் பாடுதல் பரணியாகும். கொச்சகப்பாவில்
தலைவனின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடுதல் திக்கு விசையம் ஆகும்.
தான் கொண்ட ஆசையை இரண்டு அடிக்கண்ணியாகக்கொண்டு பாடுதல்
காதல் ஆகும்.

     விளக்கம் : பாணியின் இலக்கணம், வெண்பாப் பாட்டியல் செய்யுளியல்
38, 39ஆம் சூத்திரங்களை ஒட்டியது.

172. தலைவனுக்கு நாற்கலையும் பொருட்குறைநாற் கலையும்
     சந்தமிட்டு மும்மூன்று துள்ளலும்,தொங் கலுமாம்
கலைகள்எட்டாம் வண்ணம்;அல்லாற் பஞ்சரத்தின(ம்) முதலாய்க்
     கண்டவைபா வினஞ்சிலதும் பதந்தருசிந் துகளே
பலவுமதாய்ப், பத்துஅங்கம், கலவி,மையல் தூது,
     பவனி,கதை, சாதிகம்,வா தாடல்கொம்மை, குரவை,
புலவிமுதற் காப்பியம்போல் உரைபாடை தழுவிப்
     புகல்வதுவாம். இனிப்பொருத்தம் கூறுதும்மங் கையரே [11]

பிரபந்தம் சிலவற்றின் இலக்கணம் கூறுகின்றது.

     உரை : தலைவனுக்கு நான்கு கலைகளும் எடுத்துக் கொண்ட
பொருளுக்கு நான்கு கலைகளும் ஆகச் சந்தங்கள் அமைத்துத்துள்ளலும்
தொங்கலும் மும்மூன்றாக அமைய எட்டுக் கலைகளால் பாடுவது வண்ணம்.
பஞ்சரத்தினம் முதல் உள்ள ஏனைய பிரபந்தங்கள் பாவினங்களில்
சிலவற்றையும் பதம் (நாட்டியம் ஆடுவதற்கு ஏற்ப பாடப்படும் பாடல்கள்)
தருகின்ற சிந்து பலவற்றையும் பத்து உறுப்புக்கள், கலவி, மையல், தூது,
பவனி(உலா), கதை, சாதிகம், வாதாடல், கொம்மை,