தாஅய் ‘தாவி’ (அகம்: 14.2) : தாய் ‘அன்னை’ (புறம்: 4.18) தே எம் ‘இடம்’ (நற் : 371.3) : தேம் ‘இனிமை’ (குறுந்: 300.2) சே எய் ‘முருகன்’ (குறுந் : 1.3) : சேய் ‘சேய்மை’ (குறுந்: 64.5) போஓர் ‘ஊரின்பெயர்’ (அகம் : 186.16) : போர் ‘சண்டை’ (குறுந்: 80.4) போன்ற பல உதாரணங்களில் இசை நிறைத்தற்கு வராது மொழிக்காரணமாய் வேறுபொருள் தருவதால் அளபெடையை ஒலியனாகவே கொள்ள வேண்டும். ஆயினும் நெடிலும் குறிலும் சேர்ந்த உயிர்மயக்கமாகக்கொண்டுவிட்டால் அளபெடையைத் தனிஒலியனாகக் கொள்ளத் தேவையில்லை. அளபெடையில் உறழ்ந்து வருவன எல்லாம் (இரா அ (நற்றிணை 218.8) ~ இரா (குறுந்: 145.5) ‘இரவு’; ஊஉர் (குறுந்: 262.1) ~ ஊர் (குறுந்: 15.3) ‘கிராமம்’ போன்று வருவன) ஒலியன் உறழ்ச்சியாகக் (Phonemic free variation) கொள்ள வேண்டும். ஒற்றளபெடை என்பது நெடில்மெய் (long consonant) யாகக் கொள்ளவேண்டும். அது எங்கும் உறழ்ச்சியாகவே வருகின்றது. மரங்ங் (கொட்டி) - மொழி இறுதியில் வந்தது. கண்ண்டண்ண்ணெனக் கண்டும் - இடையில் வந்தது. இது எங்கும் ஒலிநிலை உறழ்ச்சியாகவே (Phonetic free variation) வரும். |