உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும். விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது. நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள். பாட விளக்கம் : ‘பமல்விசை’ (4-வது வரி) என்பது மூலபாடம். 199. | அங்குவினாச் சொற்றொடரைப் பிரித்துவெவ்வே றுவினா அதற்குவிடை பொருளாகச் சொலல்வினாவி டையாம்; உங்குவரி நான்கடிநான் காய்க்கோமூத் திரிபோல் உயர்ந்தவரி இரண்டுசிறு வாராய்மேல் வரிகீழ் இங்கு பிறவரியின்மேல் கீழ்மூக்காய்ப் பெருவார் எனப்புகறல் முரசுபெந்தம்; ஓர்சொலின்ஓ ரளவு புங்கமுறப் பொருள்வேறா மாத்திரை வர்த்தனஞ்;சொற் பொருள்திரிய வளவறுமாத்திரைச்சுருக்கப் பாவே. [6] | வினாவிடை, முரசுபெந்தம், மாத்திரைவர்த்தனம், மாத்திரைச் சுருக்கம் ஆகியவற்றை விளக்குகின்றது. உரை : வினாவாக வரும் சொற்றொடரைப் பிரித்து வெவ்வேறு வினாவையே அதற்கு விடையாக அமையும்படி செய்வது வினாவிடை. ஓரடி ஒரு வரியாக நான்கு வரி எழுதி மேலிரண்டு வரி கோமூத்திரிபோல அமைத்தும், உயர்ந்த வரி இரண்டும் சிறியவார் போல அமைத்தும் மேல்வரி இரண்டாம் வரியிலும் மூன்றாம் வரியிலும் நான்காம் |