சுவாமிநாதம்291அணியதிகாரம்
 

ஒவ்வொரு எழுத்து நடுவில் விட்டுப் படிக்கும்போது வேறொரு செய்யுள்
வருமானால் அது காதை கரப்பு (வேறொரு செய்யுளின் காதை மறைந்து
நிற்றல்) எனப்படும்.

198. காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக்
     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்;
ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு
     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப்
போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின்
     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி;
பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று
     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி,
நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர்
ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே
எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட
மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள்
தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக
அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய
ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும்
நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும்
அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து
உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால்
உண்டான எழுபத்தைந்து