மினீரீர் (மின்,     ஈர், ஈர்) என்று மூலபாடத்தில் (2-வது வரி) உள்ளது.      மின், ஈர், இர் (மினீரிர்) என்றோ மின், இர், ஈர் (மினிரீர்) என்றோ திருத்தி         வாசித்துக் கொள்ளலாம். இங்கு பின் முறை கையாளப்பட்டுள்ளது: இற்பும்      (3-வது வரி) என்ற மூலபாடம் ‘இறப்பும்’ என்று திருத்தப்பட்டுள்ளது.                    |         26.  |         சிலபலவாய்         இலக்கியங்கண் டதற்குஇயலே சொல்லாற்               றிகழ்பகுதி விகுதிபகுத்து இடையினிற்கும் எழுத்தைச்          சொலையிசைவாய் வினைக்குறிப்புக்கு இடைநிலையாய்ப்புகல்வார்               தொகுக்கும்அன் ஆன்இச்சினத்து ந்தநனுமை குனவும்          அலிஞடயத் தளவணவீ யக்கோவெலா வற்றவைமற்               றாலுவ் வெனும் எண்ணான்கு இரண்டும் பிறவு          மலிவிகுதி பதம்உருபு மேலொன்றும் பலவும்               வருவது போவது விகற்பமாம் இரு சாரியையே.               (4)  |                 இது இடைநிலையும்,     சாரியையும் பற்றி விளக்குகின்றது.           உரை:     இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் சொல்வதால் குறிப்பு      வினையில் பகுதி, விகுதி பகுத்துப் போக இடையில் நிற்கும் எழுத்தை      இடைநிலை என்று சொல்லுவர் புலவர். அன், ஆன், இ, சு, இன், அத்து,      நம், தன், உம், ஐ, கு, ன, ம, அல், இ, ஞ, ட, ய, து, அள், அவ், அண், அ,      ஈ, அக்கு, ஓ, ஏல், ஆ இறுதியில் வருவனவும் மற்றும் ஆல், உ என்பனவும்      ஆக முப்பத்து நான்கு விகுதி பகுதி, உருபு ஆகியவை ஒன்றோடொன்று      சேரும் போது ஒரு சாரியையாயினும் பல சாரியையாயினும் வருதலும் வராமல்      போதலும்ஆகிய இரண்டு விகற்பங்களைச் சாரியை உடையது.      அன் - ஒன்றனை (ஒன்று +     அன் + ஐ)      ஆன் - ஒரு பாற்கு (ஒருபஃது + ஆன் + கு)      இச்சு - தச்சிச்சி (தச்சு + இச்சு + இ)      (இவ்வாறு இலக்கண விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, பக்: 85)   |