விகாரம்’ (111); ‘தோன்றல் திரிதல் கெடுதல் நிலைமாறுதல் என நான்காகும் புணர்ச்சியில் விகாரம்’ (113) என்ற நூற்பாக்களைத் தழுவியது. தோன்றல் திரிதல் கெடுதல் நிலைமாறுதல் விரித்தல் நீட்டல் குறுக்கல் வலித்தல் மெலித்தல் முதற்குறை இடைக்குறை கடைக்குறை தொகுத்தல் | - யாது > யாவது - உழுந்து > உளுந்து - யாடு > ஆடு - மிஞிறு > ஞிமிறு விசிறி > சிவிறி - விளையுமே > விளையும்மே - இது > ஈது - தீயேன் > தியேன் - குறுந்தாள் > குறுத்தாள் - தட்டை > தண்டை - தாமரை > மரை - ஊஞ்சல் > ஊசல் - உலகம் > உலகு - சோழநாடு > சோணாடு | சந்தி என்பது மிகுதிப் புணர்ச்சியாகவும் விகாரம் என்பது புணர்ச்சி இல்லாமல் ஏற்படும் மாற்றமாகவும் கருதலாம். இது உருபு புணர்ச்சி, விகுதிப் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றமாகக் கொள்ளலாம். இத்தகைய புணர்ச்சி மாற்றத்தை அகநிலைப்புணர்ச்சி (Internal Sandhi) என்பர் மொழியியலார். பதத்தோடு பதம் புணரும் புணர்ச்சியைப் புறநிலைப்புணர்ச்சி (external Sandhi) என்பர். பதவியலில் அகநிலைப் புணர்ச்சியை மட்டும் விளக்க வேண்டும். அவ்வாறு இலக்கண ஆசிரியர்கள் யாரும் செய்யவில்லை. |