6. | குருமகன்தன் மகன்அரசன் மகன்கொடுப்போன் பணிவோன் கூரியனா வனம்பானீர் பிரித்தோன்நன்கு உணர்ந்து புரையகற்றல் கிளியெனச்சொற் றாங்குரைத்தல் வெண்மை போலெவைக்கும் ஏற்பதுமற் றுள்ளவன்கொள் பவனாம் எருமையென வுழக்கியுண்டல் தோணியின்ஓர் பொருட்கே இசைதல்ஆ டெனப்பல் பால்ஓதல் குரங்கெறிந்து வருபவன்போல் வலிதுஅறித னுடன்சினநோய் மடம் பொய் மறவிபலநூற் கச்சம்நா ணுளன் கொள் கிலனே. (5) | நன் மாணாக்கர் தீய மாணாக்கர் இலக்கணம் கூறுவது. உரை : தன்னுடைய ஆசிரியனுடைய மகன், தன்னுடைய மகன், அரசனுடைய மகன், பொருள் கொடுப்பவன், பணிவு உடையவன், பாலிலிருந்து நீரை எடுக்கும் அன்னம் போன்று குற்றமறக் கற்பவன், கிளிபோன்று சொன்னதைச் சொல்லும் தன்மையன், வெண்மைநிறம் போன்று எல்லா நிறங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை போலப் பண்பு உடையவன் ஆகியோர் மாணாக்கனாக இருப்பதற்குத் தகுதி உடையவர்கள். எருமை நீரைக் கலக்கி உண்பது போன்ற தன்மையும் தோணி ஒரு பொருட்கே பயன்படுதல் போன்ற தன்மையும் ஆடு பல இடத்திலும் மேய்வது போன்ற தன்மையும் குரங்கு காயைப் பறித்து எறிந்து வேறொன்று கொள்ளுதல் போல வன்முறையில் அறிந்து கொள்ள விரும்பும் தன்மையும் உடையவர்களும் சினம், நோய், மடமை, பொய், மறதி, பல நூல்களைக் கற்க வேண்டுமே என்ற அச்சம், நாணம் ஆகிய பண்புகளை உடையவர்களும் கற்றுக் கொள்ளும் தகுதி இல்லாதவர்கள். 7. | கொள்பவன்கோள் உணர்ந்துஇடங்கா லம்குறித்து விரைவு கோவமின்றி ஓதல்கொடை பொழுதொடு சென்று இறைஞ்சி வள்ளல்குணங் குறிப்பிசைந்து அகம் வயிறாச் செவியே வாயாநூல் சோறா உண் பவனில்விரைந் தறிதல் | |