உள்ளம்கொள் வதாங்கேட்டல், சிந்தித்தல், பயிற்சி உணர்தல் பயிலியல்ஒரு காற் கேட்டவன்பின் கேட்கிற் கள்ளம் மிக விலைமுக்காற் கேட்டபின்முறை யறியுங் கற்றல்கால், பயிற்சி அரை, பிறர்க்குஓதின் முற்றே. (6) | கொடுத்தல் (கொடை), கொள்ளும் முறை ஆகிய இரண்டின் இலக்கணமும் விளக்குகின்றது. உரை : மாணவனுடைய கொள்ளும் அறிவு உணர்ந்து இடம், காலம் முதலியன குறித்துக் கொண்டு விரைவும் கோபமும் இல்லாமல் கற்பித்தலே கொடையாகும். நல்ல சமயத்தில் சென்று வணங்கி, ஆசிரியனுடைய குணத்தையும் குறிப்பையும் அறிந்து மனம் வயிறாகவும், செவி வாயாகவும், நூலைச் சோறாகவும் கொண்டு உணவு உண்ணச் செல்பவனைப்போல விரைந்து அறிந்து கொண்டு உள்ளத்துள் கொள்ளும்படி கேட்டல், அவ்வாறு கேட்டலைச் சிந்தித்தல், பலகாலும் பயின்று உணர்தல் ஆகியவற்றோடு தான் பயின்ற பொருளை ஒரு தடவை கேட்டவன் மீண்டும் ஒரு முறை கேட்டால் நூலிலே மிகுதியும் பிழைபடுதல் இல்லை; மூன்று முறை கேட்டால் ஆசிரியர் கற்பித்த முறையை அறிந்து கொள்வான். தான் ஆசிரியனிடத்துக் கற்றுக் கொள்வது நாலில் ஒரு பங்கு. பிற மாணாக்கர்களோடு பழகும் வகையால் மேலும் கால் பங்கையும் பெற்றுப் பிறர்க்கு எடுத்துக் கூறுதலால் அவன் அறிவு முழுமை அடையும். விளக்கம் : இது நன்னூல் 40 முதல் 45 சூத்திரங்களின் தொகுப்பு. 8. | ஓதினவன்கேட் பவன் நூற்பெயர் வழியாப் புஎல்லை உணர்ந்து பொருட் பயனொடுகாலங் களன்காரணம் என்று ஈதுபதினொன்றுபா யிரச் சிறப்பாம். அது நூல் இயம்பு பாவினத்துரைப்பர் தன் குருமா ணாக்கர் | |