சுவாமிநாதம்67
 

3. சொல்லதிகாரம்

1. பெயர் மரபு

34. சொல்வகுக்கிற் றனிமொழியுந் தொடர்மொழியும் ஆகிச்
     சொற்பொருள்கொண்டு, இருதிணைஐம் பாலின், மூன்று
                                           இடத்தாய்,
 ஒல்வழக்கிற் செய்யுளினிற் குறிப்பில்வெளிப் படையால்
      ஒரு பொருளால் பலபொருளாற் விரிப்பதுசொல் லியலாம்
பலவகையாம் பொருளின்உயர் திணைமக்கட் சுட்டாம்;
      பகரும்அவ ரல்லது(உ)யிர் உள்ளவும்இல் லவுமாய்ச்
செல்வது(அ)ஃ றிணையாம்;ஆண்,பெண்,பலர்மூன் று(உ)யர் பாற்;
      செறிஒன்று, பலஇரண்டும் இழிபால்அன் னதுவே.     (1)

சொல்லின் பொது இலக்கணமும் அவற்றின் பாகுபாடும் கூறுகின்றது.

     உரை : சொல் என்பது ஒரு மொழி (தனி மொழி)யும் தொடர்
மொழியும் என இருவகைத்தாய்ச் சொற்பொருள் கொண்டு இருதிணையாகிய
ஐந்து பாலினையும் மூன்று இடத்தினையும் வழக்கின் கண்ணும் செய்யுட்
கண்ணும் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் ஒரு பொருளாகவும் பல
பொருளாகவும்