விரிக்கும். பல வகையான பொருள்களுள் உயர்திணை என்பது மக்கட் சுட்டையும் அஃறிணை என்பது அவரல்லாத உயிர் உள்ள பொருள்களையும் உயிர் இல்லாத பிற பொருள்கள் அனைத்தையும் குறிக்கும். ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்று பாலும் உயர்திணைக்கும்; ஒன்றன்பால், பலவின் பால் என்ற இரண்டும் அஃறிணைக்கும் உரியன. உயர்திணையை உயர்பால் என்றும் அஃறிணையை இழிபால் என்றும் குறிப்பிட்டுள்ளார். விளக்கம் : சொல் என்பதை இங்கு குறைந்த அளவு பொருள் உடைய பகாப்பதச் சொல் அதாவது மொழியியலில் கூறும் உருபன் (Morpheme) என்று கொள்ள முடியாது. எனவே வார்த்தை (word) என்பதற்கு இணையான பொருள் உடையதாகக் கருதலாம். இருதிணை ஐம்பால் என்பது பொருள் அடிப்படையில் தமிழில் அமைந்திருப்பது உண்மையாயினும் இலக்கண ஆராய்ச்சியில் பொருள் மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது. உயிருள்ள அஃறிணைப் பொருள் பலவற்றில் ஆண், பெண் வேறுபாடு இருப்பினும் தமிழ் இலக்கணத்தில் குறிப்பிடாதது மொழியியல் அமைப்பில் வேறாகப் பயன்படாதது தான். அரசன் வந்தான், அரசி வந்தாள் என்று உயர்திணையில் வினைமுற்று வேறுபடுவது போல அஃறிணையில் பசு வந்தது, காளை வந்தது என்று பெயர்ச்சொல் பால் வேறுபாட்டிற்கேற்ப வினைவிகுதி வேறுபட்டு வருவதில்லை. எனவே தான் மொழி அமைப்பில் வேறுபட்டு வரக்கூடிய பொருள்களை மட்டுமே இலக்கணத்தில் விளக்க வேண்டும் என்று கூறுவர் மொழியியலார். உயர்திணை, ஐம்பால் பாகுபாடு பெயர்ச் சொல்லுக்கு மட்டுமே பொருந்துவது. வினைச்சொல்லில் அதாவது முற்று வினைகளில் பால்காட்டும் விகுதியில் அந்த வேறுபாடு இருந்தாலும் வினையடிச் சொற்களை (வினைப் பகுதிகளை) அவ்வாறு பகுக்க முடியாது. ஒரு வினைப்பகுதியே எல்லாத் திணையும் |