வந்தான் - உயர்திணை ஒருமை ஆண்பால் வினைமுற்று வந்தது - அஃறிணை ஒருமை ஒன்றன்பால் வினைமுற்று பொன்னன் - உயர்திணை ஒருமை ஆண்பால் பெயர்க் குறிப்பு. நான் வந்தேன் - தன்மை ஒருமை நாங்கள் வந்தோம் - தன்மைப் பன்மை நீ வந்தாய் - முன்னிலை ஒருமை நீங்கள் வந்தீர்கள் - முன்னிலை பன்மை சாத்தன் - விரவுப் பெயர் சாத்தன் வந்தான் என்புழிச் சாத்தன் உயர்திணை ஆண்பாலையும், சாத்தன் வந்தது என்புழிச் சாத்தன் அஃறிணை ஒன்றன் பாலையும் உணர்த்தும். இன்று மாணிக்கம், ரத்தினம் போன்ற சொற்கள் விரவுப் பெயர்களாகப் பயன்படுகின்றன. அவை உயர்திணையில் ஆண்பாலையும் பெண்பாலையும் அஃறிணை ஒன்றன்பாலையும் உணர்த்தும். மாணிக்கம் வந்தான் என்புழி உயர்திணை ஆண்பாலையும் மாணிக்கம் வந்தாள் என்புழி உயர்திணைப் பெண்பாலையும் மாணிக்கம்வந்தது என்புழி அஃறிணை ஒன்றன்பாலையும் உணர்த்துகின்றன. விளக்கம் : இது இலக்கண விளக்கம் 165, 166, 167 ஆகிய சூத்திரங்களையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நன்னூலில் இடம் பற்றி இரண்டு நூற்பாக்கள் காணப்படினும் (265, 266) அவற்றைச் சொல்லும் முறையில் இலக்கண விளக்கம் மாறுபாடு செய்துள்ளது. நன்னூலார் மூவகை இடச்சொல்லும் எவ்வாறு திணை பால் விளக்கும் என்று முதலில் (265) கூறிவிட்டே மூவகை இடம் இது |