என்று (266) விளக்குகிறார். இலக்கணவிளக்கத்தாரோ மூவகை இடத்தை முதலில் (166) விளக்கிவிட்டு அடுத்து அவை எவ்வாறு திணைபால் விளக்குகிறது என்று விளக்குகிறார். இலக்கணவிளக்க முறையே சுவாமிநாதத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. 36. |
இலக்கணமது உடையதுஇலக் கணப்போலி மரூஉச்சொல் இயல்புமூன்று; இடக்கரு(ம்),மங் கலங்,குழூஉக் குறியும் பலத்தகுதி மூன்று;இவைகள் ஆறுமே வழக்காம்; பலவகைத்தா து(உ)டற்கு (உ)யிர் போற்பல சொலினும் | |
பொருளாய்; |
| |
அலர்த்துஅணிகள் பெற்றயாப்பிற் செயும்செய்யுள் இயலாம்; அன்மொழிவிகா ரம்வினைக்குறிப்பு ஆகுபெ யர்கள் ஒலித்தகுதி குறிப்புமுதல் தொகைபொருள் மாற்றாதி யுணர்த்தல்குறிப் பாங்;குறிப்பில் வெளிப்படையாம் அவையே. (3) | வழக்கு, செய்யுள், குறிப்பு, வெளிப்படை ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றது. உரை : இலக்கணம் உடையது, இலக்கணப்போலி, மரூஉச்சொல் என்று இயல்பு மூன்று வகைப்படும். இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி எனத் தகுதி மூவகைப்படும். இந்த ஆறும் வழக்குக்கு உரிய இலக்கணமாகும். பலவகைத் தாதுக்களினாலும் அமைக்கப்பட்ட உடலுக்கு உயிர்போலப் பல சொற்களால் பொருட்கு இடனாகப் பூத்து, அழகு பெற்ற யாப்பால் அமைக்கப்பட்டது செய்யுள். அன்மொழி, விகாரம், வினைக்குறிப்புச்சொல், ஆகுபெயர்கள், தகுதிக்குறிப்பு, முதல்குறிப்பு, தொகை, பொருண்மாற்று ஆகியவை உணர்த்துதல் குறிப்பாகும். குறிப்பில்லாத எல்லாம் வெளிப்படையாம். விளக்கம் : இயல்பு என்பதைச் சொற்பொருள் நேரடியாகச் சொல்லுவோன் கருத்தைக் குறிப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவானதாகவும் கொள்ளலாம். இலக்கணம் உடையது என்பது இலக்கணத்துக்குப் பொருந்தி |